பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/626

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 153 கரிய காளத்தாலும் (மன்மதனது எக்காளமாகிய குயிலின் ஒலியாலும்), பெருகியுள்ள நீரா லும் (கடலொலியாலும்), எண்ணி எண்ணிக் கருதும் சிந்தன்ையாலும், வில்லினிட்த்தே அசைகின்ற கொலையே செய்யவல்ல மன்மதனது ட்ல பாணங்களாலும், கொடி போன்ற இடையை உடைய இவள் (தலைவி) கவலைப்பட்டு நின்று அழிவு படாமல் l

குராமல ரலங்காரம் கொண்டு விளங்கும் (உனது) திருப்புயத்தில் அணிந்துள்ள கடப்பமலரின் குளிர்ந்த மாலையை நீ கொடுத்து அருள்புரிவாயாக. பர்வதராச புத்திரியின் தலைவனான சிவன், கலைமகளின் (சரசுவதியின்) தலைவனான பிரமன், திருமகளின் இலக்குமியின்) தலைவனான திருமால் மூவரும் தொழும் வேலனே! தினைப்புனத்தில் இருந்த மான் போன்ற வள்ளியும், விண்ணுலகத்துள்ள மேன்ம்ை பொருந்திய கற்பக வனத்தில் வளர்ந்த தேவசேனையும் நெருங்கி அணையும் திருமார்பனே! தலமகள் மீது (தலமகளாம் பூமியின் மீ து) Sமதிக்கப்படும் தேவர்கள் (வந்து) உலவும் (திருத்) தணிகையில் வாழும் செவ்விய ஒளி வாய்ந்த வேலனே! கேத வன மான் - தெய்வானை, கநவனம் = கம்+ந+வனம் = விண்ணுலகத்துள்ள மேன்மை பொருந்திய கற்பகவனம்; கனம் வணம் எனப்பிரித்துப் பொன்மயமாகிய கற்பக வனம் என்றும் பொருள் கொள்ளலாம். Sஎண்புலவர் மதிக்கப்படுந் தேவர்.