பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/627

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை / தனியவர் கூருந் தனிகெட நாளுந் தனிமயி லேறும் பெருமாளே.(13) 262. தணிகையில் வாசம் செய்ய தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம் தனதான கரிக்குழல் விரித்தும் புறக்கயல் விழித்துங் கரிக்குவ டிணைக்குந் தனபாரக்கரத்திடு வளைச்சங் கிலிச்சர மொலித்துங் கலைத்துகில் மினுக்யும் பணிவாரைத் தரித்துள மழிக்குங் கவட்டர்க ளிணக்கந் ■ தவிர்த்துனது சித்தங் களிகூரத். தவக்கடல் குளித்திங் குணக்கடி மையுற் iறுன் தலத்தினிலிருக்கும் படியாராய், புரத்தையு மெரித்தங் கயத்தையு முரித்தொண்

  1. பொடிப்பணி யெனப்பன்S குருநாதா!

'தனித்து நின்று நின்னையே போற்றுபவரின் துயர் கெடுப்பவன் நீ ஆதலின், இந்தத் தலைவி உன்னையே நினைந்து தனித்திருந்து துயர் உறுகின்றாள். ஆகவே, உனது குளிர் மாலையை இவளுக்குத் தரத்தகும். தந்தருளுக - என அகப்பொருள் துறை கொண்ட நான்காம் அடிக்கு ஏற்ற கருத்துள்ள இந்த ஈற்றடியைச் சுவாமிகள் ஆண்டுள்ளார். tஇங்கு அருணகிரியார் வேண்டிக் கொண்டபடியே அவர் கிளியான பின்னர்த் திருத்தணிகைக்கு வந்து தணிகேசர் திருக்கரத்து அமர்ந்து சீர்பாத வகுப்பு ஆதிய பாடினரோ - என்றும் தோன்றுகின்றது. திருத்தணிகை முருகனைத் திருவகுப்பிற் பல வகுப்புக்களிற் கூறி யுள்ளதும் உணர்தற் பாலது. (அருணகிரி நாதர் வரலாறு பக்கம் 147, 178, 179) 1பொடி பணி என் அப்பன் எனப்பிரித்து, திருநீற்றினையும் பாம்பினையும் அணிந்த என் அப்பன் எனப் பொருள்கொள்க Sதிருத்தணிகையில் தந்தைக்கு முருகவேள் உபதேசம் செய்ததாக வரலாறு உளதாதலின் சிவனுக்குக் குருநாதனே என்றார்.