உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/660

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 187 நடந்து நடந்து (பலநாள் போய்ப்) பழகியும், தரித்திரர் களாகவே மீளும்படி, நாளைக்கு வா - நாளைக்கு வா என்றே அவர்கள் கூற நான் வாட்டமடைந்து முகம் (வெட்கத்தாலும் துக்கத்தாலும்) களை மாறிச் சோர்வு கொண்டு வருந்தும் முன்னரே உன்னுடைய செவ்விய ஒளிவீசும் தாமரையன்ன இரண்டு திருவடிகளையும் அருள்புரிவாயாக இடப வாகனத்தை உடையவர், விமலர் (பரிசுத்த மானவர்), முத்தலைச் சூலத்தை ஏந்தினவர், விகிர்தர் (கடவுள்), tமேலான யோகத்தினர், நிலவுடனே விளா (கூவிளம் - வில்வம்), சிறிய பூளைச்செடியின் பூ Sபல்லொடு கூடிய வெண்டலை, கங்கையாறு, விஷப்பாம்பு இவைகளைச் சூடியுள்ள அதிக பாரமுள்ள சடைப் பெருமான் காணவும், உமாதேவி மகிழவும், ஞானத் தளர்நடை குழந்தை நடை)யிட்டு அவர்கள் முன்பு வருபவனே! "மிகுதியாக மலரும் நீலோற்பலச் சுனையை உடைய தனிமலை, அநாதி (ஆதி - தொடக்கம் அற்ற) மிகப்பழைய தனிமலை (அல்லது - அதிகமாக மலர்கின்ற நீலோற்பலம் மலரும் சுனைக்குரிய் அனாதி மூர்த்தியே! தணிமலை) யதனில் உலவுகின்ற பெருமாளே. (இருபாதம் அருள்வாயே)