உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/665

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை தக்குகுகு டுே டுட்டுண் டிக்குகுகு மகு தத்தந் தத்தனத னாத னுர்த்துஞ் சதபேரி, சித்தர்கள் நி டாதர் வெற்பின் கொற்றவர்சு வாமி பத்தர் திக்குகளொர் நாலி ரட்டின் கிரிசூழச். செக்கணரி மாக னைக்குஞ் சித்தணிகை வாழ்'சிவப்பின் செக்கர் நிற மாயி ருக்கும் பெருமாளே.(27) 276. முத்தி பெற தனன தந்த தத்த தனண தந்த தத்த தனன தந்த தத்த - தனதான tஎனைய டைந்த குட்டம் வினைமி குந்த பித்த மெரிவ ழங்கு வெப்பு வலிபேசா. இகலி நின்ற லைக்கு முயல கன்+கு லைப்பொ டிரும லென்று ரைக்கு மிவையோடே மனைகள் பெண்டிர் மக்கள் தமைநி னைந்து சுத்த மதிம யங்கி விட்டு மடியாதே. மருவி யின்றெ னக்கு மரக தஞ்சி றக்கு மயிலில் வந்து முத்தி தரவேணும்; நினைவ ணங்கு புத்த ரணைவ ருந்த ழைக்க நெறியில் நின்ற வெற்றி முனைவேலா. 'முருகன் நிறம் - சிவப்பு செய்யன் சிவந்த ஆடையன் (திருமுருகாற்றுப்படை) tஎனையடைந்த குட்டம் - அருணகிரியார் இளமையில் (இறைவன் ஆட்கொள்வதற்கு முன்னர்) வேசையர் மயலால் பெரிய நோய்வாய்ப் பட்டு வருந்தினர் போலும் "வேசையர் மயல்மேலாய் வெடுக் கெடுத்து மகா பிணி மேவிட முடக்கி வேட்கு மதாமத வீணனை" என்று தம்மையே நொந்து கொள்கின்றார். (திருப்புகழ் - 850) 'குலைப்பு - நடுக்கம்