பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/664

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 191 தெய்வயானையாகிய கணபதிக்கு இளைய பெருமாளே! வெள்ளையானை ஐராவதத்துக்குத் தலைவனே! தெய்வயானை (தேவசேனைக்கு) இனிய (இனிமை தரும்) பெருமாளே! (அல்லது) (வெள்ளையானை) ஐராவதத்துக்குத் தலைமை கொண்டுள்ள தெய்வயானைக்கு இனிய பெருமாளே! (முறி கிள்ளி வீசுற்று மலர் பணிவேனோ) 275 எத்தனை கலகச் சண்டைகள், (எத்தனை) மாய வித்தைகள், எத்தனை நோய்கள், எத்தனை பைத்தியச் செயல்கள், எத்தனை இயங்குதினை நிலைத்திணைப் பொருள்கொண்ட இப்பிரபஞ்சத்தில் எடுத்த உடல்கள், எத்தனை நீங்காத அச்சம் உறுத்தும் செயல்கள்; எத்தனை பேராற்றலான செய்கைகள். (எத்தனை) ஆசைகள், எத்தனை மாமிசத்தை உண்டு பசியைப் போக்கும் செயல்கள் (இவைகளுக்கு எல்லாம்.ஆளான நான்) பித்தம் பிடித்தவன் போன்ற நான் - வயிற்றில் உண்டு. இவ்வண்ணம் கெடாமல், (பிறவியினின்றும்) விடுதலையைப் பெற்றிட நினது (பக்த ஜனங்களின் (அடியார் கூட்டத்தின்) செயல்களான தன்மையையும், (யாரும்) உணர்தற்கரிதாக நிற்பதும், (அல்லது) உன்னால் படைக்கப்பட்ட சனத்தொகுதியில் (மக்கள் தொகுதியின்) (செயல்களான) முயற்சிகளால் அறியப்படாமல் நிற்பதும், (அல்லது) உனது ஆசனம் மயில் (மயில் - ஆணவம் - மனம் திரோதானசத்தி - என்பாராதலின்) ணவ நிலையில் உணர்தற் கரிதாய் நிற்பதும், (பரவிப் '; ஒளிமயமான பிரணவப் பொருளாய் நிற்பதும், பாசபந்தத்தால் அறிதற்கரிதாய் நிற்பதுமான (உனது) கழலை(யும்) தந்தருளுக. தத்தனத னாத தத்தம்...தகுதிதோ