உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/667

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை நிலைபெறுந்திருத்தணியில்வி ளங்கு சித்ர - *G நடிய குன்றில் நிற்கு முருகோனே; தினைவி ளங்க லுற்ற புணஇ ளங்கு றத்தி செயல றிந்த ணைக்கு மணிமார்பா. திசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்த சிறைதி றந்து விட்ட பெருமாளே. (28) 277. திருவடி பெற தான தத்தன தான தத்தன தான தத்தன தான தத்தன தான தத்தன தான தத்தன தந்ததான ஏது புத்திஐ யான் னக்கினி யாரை நத்திடு வேண வத்தினி லேயி றத்தல்கொ லோன னக்குநி தந்தைதாயென். றேயி ருக்கவு நானு மிப்படி யேத வித்திட வோச கத்தவ ரேச லிற்பட வோந கைத்தவர் கனன்கள் காணப்; tபாதம் வைத்திடை #யாதெரித்தெனை தாளில் வைக்கநி யேம றுத்திடில் பார்ந கைக்குமை யாத கப்பன்முன் மைந்தனோடிப். "நெடிய குன்றில் - என்பதற்கு நெடியம் என்னும் குன்றத்தில் எனவும் கூறுவர். நெடியம் திருத்தணிகைக்கு அருகில் உள்ள ஒரு முருகர் மலை. tதிருவடி தீட்சையை விரும்பினர் அருணகிரியார்: " கூற்றம் வருவதன் முன் பூவாரடிச் சுவடு என் மேற் பொறித்து வை" என வேண்டினர் அப்பரும். அப்பரைப் போலவே, அருணகிரியார் திருவடி தீட்சை, வேண்டிய வண்ணமே, பெற்றனர் என்பது. "எனது தலையிற் பதங்கள் அருள்வோனே", "பதயுக மலர் தந்த பேரருள்" "முன் அளித்த பாதம்", " காமுகன் அகப்பட்ட ஆசையை