உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/668

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 195 (அழியாது) நிலைபெற்று விளங்கும் திருத்தணியில் விளங்குகின்ற அழகிய பெருமை வாய்ந்த மலையில் நிற்கும் முருகனே! தினை செழித்து விளங்கும் புனத்தில் (மலைக் கொல்லையில்) இருந்த் இளைய குறத்தி (வள்ளியின்) (பத்திச்) செயலை அறிந்து (அவளை) அணைத்த அழகிய மார்பனே! பிரமன் திகைத்து நிற்கும்படி அசுரர்கள் அன்று (தேவர்களை) அடைத்த சிறையைத் திறந்து விட்ட பெருமாளே! (மயிலில் வந்து முத்தி தரவேணும்) 277 ஏது புத்தி ஐயா எனக்கு இனி (யான்) யாரை விரும்பி நாடுவேன்; வீணாக (பயனிலியாக) இறப்பது தானோ (என் தலைவிதி); எனக்கு நீயே தந்தை தாய் என்று இருந்தும் நான் இப்படித் தவித்திடலாமா! உலகத்தவரின் இகழ்ச்சி மொழிக்கு ஆளாகலாமா! (என்னை) இகழ்ந்து சிரிப்பவர்கள் கண் முன்னே (கண் காணும்படி) (உனது) திருவடியை வைப்பாயாக, (திருவடி திகூைடி செய்தருளுக) ஐயனே (அல்லது, என்னை உன் திருவடியில் வைப்பாயாக) (என்நிலை) தெரிந்து என்னை (உனது) திருத்தாளிற் சேர்க்க நீயே மறுப்பாயானால் உலகோர் நகைப்பர், ஐயனே! தந்தையின் முன் குழந்தை ஒடிச்சென்று மறப்பித்த கால்கள்" "தலை நாளிற் பதம் ஏத்தி" எனவரும் திருப்புகழ்ப் பாக்களால் (114, 289, 392, 426, 814) அறியக் கிடக்கின்றன.

பவப்பிணி பாற ரட்சை செயா திருத்திடில், பார் நகைக்குமையா, தகப்பனை மைந்தனோடிப் பாலினுக்கொருதாள் சிதைத்திடு பாலனுக்கிரு தாளளித்திடு பாதபத்தி மெஞ்ஞான முத்திகள் தந்திடாதோ"

- (பாடபேதம்) மு. அருணாசலம் ஒலை ஏடு - 71.