பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/672

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 199 (அடுத்த பக்கம் பார்க்க) பூமாலையை அணிந்த கழுத்தை உடையவர்கள், முத்து அலங்காரம் வாய்ந்த ரவிக்கை அழுந்துகின்ற கொங்கையை உடையவர்கள், வஞ்சகம், மோகமயக்கம் இவைகளைச் செலுத்தி மனத்தைப் பாழாக்கும் மடமாதர்கள். மார்பை அசைத்து, மோகமயக்கத்தை உண்டு பண்ணி, இருட்டறைக்குள் ©lᎻᎱᎢ என்று அழைத்துப் போய், (என்னிடமுள்ள) பொருளைக் கவர்ந்து சம்பந்தம் செய்யும் (தழுவும்) (பொது) மகளிர் பொருட்டு நான் வேதனைப் படுவது தவிராதோ. கடல் வற்றும்படி சிறந்த பாணத்தைச் செலுத்திக் கடலின் மீது அணையிட்டு அடைத்து, ஒப்பற்ற படையைப் பிரயோகித்துப் படும்படி செய்து கர்வங் கொண்டிருந்த அரக்கன் (ராவணனுடைய) தலை பத்தையும் மலை விழுவது போல மேலே அறுத்து நிலத்தில் விழ அடித்துத் தள்ளி, சத்திய சொரூபியான வேத லட்சுமியாம் சீதையைச் சிறையினின்றும் விடுவித்தருளிய வீரம் பொருந்திய அச்சுத ராமருக்குச் சிறந்த அற்புதம் வாய்ந்த மருகனே! நீலி (கருநிறங் கொண்டவள்), மாசு அற்றவள், குணங்கடந்தவள், முத்துக்களுள் கடல் முத்துப் போன்றவள், ஒளி வீசும் (பொற்) கொடி போன்றவள், அழகிய நீல ரத்தின (அணியைக்) கொண்ட அறக்கிளி (தருமக்கிளி) H ஆகிய பார்வதியின் குமரன்ே! "கச்சியில் முப்பத்திரண்டு அறங்களையும் புரிந்த கிளியன்ன காமாகூரி. 'அறம் இரண்டெட்டெட் டெட்டும் வளர்க்கும் தலைவி" திருப்புகழ் - 60. இச்சைப்படி தன்பேரறம் எண்ணான்கும் வளர்க்கும் பச்சைக் கொடி" (வில்லி பாரதம் - அருச்சுனன் தீர்த்த யாத்திரை - 13). 'ஜகத்தில் முப்பத்திரண்டறம் வளர்த்தவள்" - கூேடி கோபி.தமிழ்.