பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 முருகவேள் திருமுறை 12 - திருமுறை 2– இரண்டாவது திருப்பதி, திருச்சீரலைவாய் என்கிற திருச்செந்துளர் (திருநெல்வேலியிலிருந்து 35-கல். ரெயில்வே நிலையம். இங்குள்ள சமுத்திர தீர்த்தத்தில் ஸ்நாநஞ் செய்து ஐந்து தலைகளில் ஒன்றிழந்த பிரமதேவனுக்கு அற்ற தலை கிடைத்ததாலும், பாண்டிய ராஜன் புத்திரியாகிய அங்கசுந்தரி என்பாளுக்குச் சாபத்தால் வந்த குதிரைமுகம் மாறி அழகிய முகம் கிடைத்ததாலும், அத் தீர்த்தத்துக்கு வதனாரம்ப தீர்த்தம் என்று பெயர். "சிகைத் தோகை" (51) என்னுங் கந்தரந்தாதிச் செய்யுளில் மகள் வாசிகைத்தோ' என்பதன் பொருளைக் காண்க "செந்திலை உணர்ந்துணர்ந் துணர்வுற' (47) "கயிலைமலை யனைய செந்தில்'(51), "மகா புநிதந் தங்குஞ் செந்தில்" (94) என்னுந்திருப்புகழ்த் திருவாக்கால் இத் தலத்துப் பெருமை புலப்படும். “நஞ் செந்தின் மேய வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்' என்பது அப்பர் சுவாமிகள் திருவாக்கு. பூனி குமரகுருபர சுவாமிகள் "கந்தர் கலிவெண்பா" பாடின திருப்பதி. இதற்குத் தல புராணம் உண்டு.) 16. தரிசனம் பெற தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந் தண்கழல்சி லம்புடன் கொஞ்சவே நின் தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன் 'சந்தொடம ணைந்து நிேன் றன்புபோலக் கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங் கஞ்சமலர் செங்கையுஞ் "சிந்துவேலும் கண்களுமு கங்களுஞ் சந்திர நிறங்களுங் கண்குளிர என்றன்முன் சந்தியாவோ? புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும் பொங்கியெழ வெங்களங் கொண்டபோது 'பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன் புண்டரிகர் தந்தையுஞ் சிந்தைகூரக் 1. சந்தொடம்-சந்தோஷம். 2. நின்ற அன்பு 3.நிறம்-காந்தி. 4. பொன்கிரி என அம் சிறந்து எனப் பிரிக்க அம்-அழகு. * சிந்து கொடி-கந்தரந்தாதி 21.