உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/716

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 243 அகலம், நீளம் என்ற ஒர் அளவு சொல்லுதற்கு இயலாத (பேரின்பப்) பொருளில் (ம்னம்) அமைந்து (அப்பொருளை) அடைய வல்லோரை அசடர் என்றும் (மூடர் என்றும்), ர் என்றும் (ஊமையர் என்றும்), வீண் பேச்சுக்களைப் பேசி (துன்பந்தரும் பேச்சுக்களைப் பேசி), அறிவிலியாகிய நான் அழிந்து போகலாமா! எல்லா உலகங்களும் புகழும்படி நாள் தோறும் மலர்தல் தவறாத செங்கழுநீரும், ல்லையும், கடம்பும் அணிகின்ற (திரு) மார்பனே! Əs»/!p5*u_1 கையில் வீற்றிருக்கும் (அல்லது தணிகையை விரும்பும்) செவ்விய ஒளி வாய்ந்த வேலனே! சிகரங்களை உடைய மலையாகிய (கிரெளஞ்சம்) பொடி யாகவும், பிரமனும், (தன் உயர்ந்த நிலை) தாழ்வுபட்ட இந்திரனும் சிறையினின்றும் மீட்சி பெறவும். இருண்ட கடல் கதறி ஒலிக்கவும், (அதன் நடுவில் நின்ற) மாமரம்_(சூரன்) சிதறுண்டு பிளவு படவும் வேலாயுதத்தைச் செலுத்தின பெருமாளே! o (அறிவிலேன் அழிந்திடலாமோ) 296 பழைய உறவை எடுத்துக் கூறி ஆழைத்து, இன்பமும் பொய்யும் கலந்து (அல்லது இன்பமும் இதனுடன்), (அத்தான், மாமா) என முறை வைத்துக் கூறி மயங்கச் செய்து, அனைத்து, நகக்குறி உடலிலே படும்படி அழுத்தி, முகத்தை முகத்தோடு வைத்து உறவாடி- -- முன் யோசனை யின்றி அவசரப்பட்டு - பதைபதைத்து எச்சில் கூடிய மருந்தை ஊட்டி, கலந்த வஞ்சக தந்திரச் செயல்களை (வஞ்சகம் கலந்த தந்திரச் செயல்களை)ச் செய்பவர்கள், பல வகைகளிலும் அற்பர் எனச் சொலத்தக்க மடமாதர்கள் (அறிவிலா மாதர்களுடன்)