உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/724

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 251 299 பொருதற்கு உற்ற வீ(மலர்ப் பாணங்களின்) கந்தொடு (பற்றுக் கோட்டுடன்) (மலர்ப் பாணங்களால்) அல்லது பொரு வீக்கம் தொ(ட்)டு (பொருகின்ற பெருமை - கர்வம் கொண்டு), போர் செய வந்த இக்கன் (கரும்பு வில்லேந்திய காமன்) பிரயோகிக்கின்ற இந்தப் புதுமைவாய்ந்த தாமரைப் பாணங்களால்- o புளகங் கொண்டுள்ள கொங்கை யிடத்தில் நெகிழ்ச்சியுற்ற பூந்தாதுக்கள் நெருப்பைப் பொழிந்து வீசத் தென்ற்ற் காற்று சோர்வடையச் செய்ய, தெருவில் பெண்கள் மிகுதியாகப் புகை கொண்டு சண்டையிடவேண்டித் திரிய, திங்கள் (சந்திரன்) உதித்து (நிலவு) வீசத் தொடங்க, செயல் எல்லாம் அற்று, இங்குப் படுக்கையில் துளக்கம் இல்லாது அச்சத்துடனும் சோர்வுடனும் கிடக்கும் இந்தப் பெண்ணுக்கு உன் குராமாலையைத் தந்தருள வேணும். அருவி (நீரருவி) வீழும் வள்ளிமலைப் ப்ரதேசம் :: (வள்ளி வாழ்ந்திருந்தமையால்) புனித GՆ) மாகப் போற்றித் திரிந்: செந்தின் விதைத்திருந்த அரும்ை வாய்ந்த வேடர்களுக்கு எளியவனாய் நின்றவனே! அசுரர்களுக்கு அங்குப் பகைவனாய் நின்று, தேவர்களுக்கு அவர்களுக்குரிய உலகை அளித்து, வேலாயுதத்தைக் கையிற் கொண்ட பராக்ரமம் வாய்ந்த குமரேசனே! கற்பக விருட்சம் வைத்துள்ள அமராவதி நகரில் இருந்த இலக்குமியாம் தேவசேனையிடம் போய்ச் சேர்ந்து அந்தத் தேவியைத் க் கொண்ட புயங்களை உடைய அழகிய மார்பனே! முத்தும் சங்கும் வயல்களிற் கூட்டமாய்க் கிடக்கும் திருத்தணிகைப் பெருமாளே! செங்கழுநீர் மலரைப் புனையும் பெருமாளே! (உன் குரவைத் தரவேணும்)