உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/761

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 288 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை பொய்யுமக லாத மெய்யைவள ராவி உய்யும்வகை யோகத் தனுகாதே. புல்லறிவு பேசி யல்லல்படு வேனை நல்ல இரு தாளிற் புணர்வாயே மெய்யி பொழில் நீடு தையலைtமு நாலு செய்யபுய மீதுற் றனைவோனே. வெள்ளையிய மேறு வள்ளல்கிளை வாழ tவெள்ளமுது மாவைப் பொருதோனே: வையமுழு தாளு மையமயில் வீர Sவல்லமுரு காமுத் தமிழ்வேளே. வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு வள்ளிமண வாளப் பெருமாளே, (2) 315. மனோலயம் பெற தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்த தனதான கையொத்து வாழு மிந்த மெய்யொத்த வாழ்வி கந்து பொய்யொத்த வாழ்வு கண்டு மயலாகிக் கல்லுக்கு நேரும் வஞ்ச வுள்ளத்தர் மேல்வி ழுந்து கள்ளப்ப யோத ரங்க ளுடன்மேவி உய்யப்ப டாமல் நின்று கையர்க்கு பாய மொன்று பொய்யர்க்கு மேய யர்ந்து ளுடைநாயேன். பொழிலில் வள்ளியை அணைந்தது:- "குமரன் ஆங்கண் உறைமதுப் பொதும்ப ருள்ளால் ஒண்டொடி மாதைக் கொண்டு நிறைமகிழ் திளைப்பப் புக்கு" - தணிகைப்புரா - களவு - 181. t.மு நாலு - பன்னிரண்டு. ! வெள்ளம் - சமுத்திரத்தினிடத்தில், S வல்லம் என்பது திருவல்லம் வள்ளிமலைக்குத் தெற்கு 14 கி. மீட்டரில் உள்ளது. பாடல் 274. பார்க்க