உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/762

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - வள்ளிமலை திருப்புகழ் உரை 289 பொய்யும் நீங்காத (இந்த உடலை வளர்க்கின்ற உயிர் உய்யும்படியான (நல்ல யோகவழிகளை (நான்) அணுகாமல் இழிவான அறிவுப் பேச்சுக்களைப் பேசித் துன்பம் உறுகின்ற என்னை (உனது நல்ல திருவடியிணைகளிற் சேர்த்தருளுவாயாக மெய்யனே! (வள்ளி மலைப்) பொழிலில் நீண்ட நேரம் தையலை (வள்ளியை) முந்நான்கு (பன்னிரண்டு) சிவந்த புயங்களும் (அவள்) மேலே பட அணைந்தவனே! வெள்ளை யானை மேல் ஏறும் வள்ளலுடைய (தேவேந்திரனுடைய) சுற்றத்தாராய தேவர்கள் வாழக், கடலிடத்தே (நூற்றெட்டு யுகம் ண்டு) முதுமை உற்ற மாமரமாய் நின்ற சூரனுடன் போர் ് உலகு முழுமையும் ஆளும் ஐயனே! மயில் வீரனே! வல்லம் என்னும் தலத்தில் (வீற்றிருக்கும்) முருகனே! முத்தமிழ் வேளே! வள்ளிக் (கிழங்கின்) கொடி படர்கின்ற மலைச்சாரல் உள்ள வள்ளிமலையில் வீற்றிருக்கும் வள்ளி மணவாளப் பெருமாளே! (நல்ல இருதாளிற் புணர்வாயே) 315 செய்யத் தக்கதை அறிந்து அதன்படி வாழும் அந்த மெய்யான வாழ்க்கையை விடுவித்து, பொய்யான வாழ்க்கையைப் பார்த்து அதில் -மோகம் கொண்டு கல்லே போன்ற (கடின) வஞ்சக உள்ளத்தராம் (வேசையர்) மேல் விழுந்து, அவர்களுடைய கள்ளத்தனம் பொருந்திய கொங்கைகளின் மேற் பொருந்தி. உய்யும் வழியிற் சேராது நின்று, வஞ்சகருடனும் உபாயம்(தந்திரம்) பொருந்திய பொய்யருடனுமே கலந்து சோர்வடைந்து உள்ளம் குலைகின்ற அடியேனுக்கு