உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/780

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - வள்ளிமலை திருப்புகழ் உரை 307 நாள்களைக் கழிக்க, (ஈற்றில்) கொடிய யமன் நெருங்கிச் சோர்வுறும்படி இட்ர்களைத் (துன்பங்களை)த் தர, துன்பத்து டன் கொண்டு போய் இடு காட்டில் (சுடு காட்டில்) என்னை στf) யூட்டுவதற்கு முன்பாக உனது இரண்டு தாள்களை உணர் ந்தறியேனோ! வட நாட்டில் உள்ள வெள்ளிமலை (கயிலை மலையைக்) காத்து புள்ளி மயில் மேல் விளங்கின குமரேசனே! அழகு நிறைந்த வள்ளி நாயகியின் ஆடிகளைப் போற்றி (துதித்து) வள்ளிமலையில் (வள்ளி வேளைக்காரனாகக்) காத்து நின்ற நல்ல மணவாளனே! அடி நாளில் (முன் நாள்களில் நான்) செய்த பிழைகளைப் பொறுத்துக் களைந்து எனக்கு உனது திருவருளைப் போற்றும் வன்மையை (வளப்பமான குணத்தை) அருள் செய்த என் செல்வமே! உனது திருவடியைப் போற்றித் தாமரை மலரை உனது முடியிற் சூட்ட வல்ல அடியார்களுக்கு நல்ல பெருமாளே! (உன் இரு தாள்கள் தம்மை உணர்வேனோ) 322 தலை என்னும் உறுப்பு, அழகிய கை-கண், காது. வஞ்ச்கத்து இடம்iம் நெஞ்சு, இரத்தம், எலும்பு இவை திண்ணி, தாக் (நன்றாகப்) பொருந்தியுள்ள மாயமான (தேகம்). சில துன்பங்களும் இன்பங்களும் பொருந்தி ஈற்றில் முடிஐ சேர்ப், பின்பு செவ்விய நெருப்பில் வெந்து (பிரிய ஆவி) ஆவி பிரிதலுறும்படி விரைவில் யமன் வந்து போரிட வந்து விட்டான் என்று கொடிய துக்கத்தைக் கொண்டு, அலைச்சலும் நிலை குலைதலும் உற்று அழிபடுவதற்கு முன்பாக வினையாவும் தொலைந்து, நல்ல செய்கைகளே பொருந்தி, உனது பாதங்களை ¦ வேண்டும் என்கின்ற அன்பை எனக்குத் தந்து அருள்புரிவாயாக