உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/786

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - கழுக்குன்றம் திருப்புகழ் உரை 313 திருக்கழுக்குன்றம் 324 இல்லறத்தைத் தழுவி (அல்லது செய்த பாவம் காரணமாக, அல்லது அகங்காரம் பூண்டு) இந்தப் பூமியில் சிலநாள்கள் வேறு ஒரு (நன்) மார்க்கத்திலும் பொருந்த அறியாமல் பின்பு பயனிலாத கேடு தரத்தக்க) மன்மதன் செலுத்தி வருத்தும் பாணங்களாலே அசுத்தமானதும், மை பூசினதுமான கண் கொண்டு சுழற்றும் பெண்கள் (வேசையர்) சிரித் துப் பேசும் பொய்யெனும் கடலில் நான் முழுகி, துக்கத்திற் பட்டுத் தடுமாறியே இங்ங்னம் சில நாள் போக இம்மை வாழ்வே மெய்யென எண்ணி இந்தப் பூமி, குழந்தைகள், பொன் என்னும் மாயையில் அகப்பட்டு அந்தப் பற்றை (ஆசையை) விடாமல், உடலில் இளைப்பு, மூச்சு வாங்குதல், பித்தம் இவைகள் மேலிட நரை வந்து கிழமாகி எமனுடைய பாசக்கயிற்றின் சிக்கில் நிற்பதற்கு முன் (அகப்படு முன்னதாக), உனது மலரடியில் வைத்த பத்தியை விடாதுள்ள மனத்தைப் பெற் றுள்ள நல்ல தொ ண்டர்களுக்கு (தொண்டு செய்யும் அடியார்களுக்கு) நானும் சமமாகும்படியாக் உன்னுடைய திருவருளைத் தர வேண்டுகின்றேன்; கான்' என்றார் கந்தரலங்காரத்தில் (19); விண்டொழிந்தன நம்முடை வல்வினை. தொண்டரோ டிணிதிருந்தமையாலே என்றார் சம்பந்தர் (11-1062); நமக்கு உண்டு கொலோ. தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே - அப்பர் (IV. 101-2) "ஆரூரன் அடிமை கேட்டுவப்பார் ஆரூரில் அம்மானுக் கன்பராவாரே" - சுந்தரர் (VI - 39.11.) "அப்பன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங்கண்டாமே" மணிவாசகர் - திருவாசகம் - 26