பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/788

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - கழுக்குன்றம் திருப்புகழ் உரை 315 யாவரும் புகழத்தக்க (கரும்பு) வில்லை ஏந்திய மன்மதனும் பொடிபட்டெரிந்து போகவும் சிரித்துத் தம்மை அணுகிவந்த முப்புரங்கள் சாம்பலாகவும் புகைநெருப்பைத் தந்த கண்ணைக் கொண்டவரான சிவபிரானது காதலியாகிய பார்வதி அருளிய குமரனே! பூமியில் யுத்தம் வரவும், பிள்ளைகளும் குழந்தைகளும் அரசர்களும் யாவரும் முழுப்பகையாகவும், பகையை மூட்டி வைத்த சக்ராயுதக் கையராகிய திருமாலின் மருமகனே! விளங்குகின்ற கடப்பமலர் மாலை நிறைந்த புயங்களை மறைத்து, (வேறு) கோலத்தைப் பூண்டு, அற்புதம் நிறைந்த (வள்ளிமலைத்) தினைப்புனத்திலே இன்பத்துடன் பாவை வள்ளியை அணைந்த நீதிமானே! பூமியில் மேலான சிறப்பைப் பெற்று, தேவேந்திரன் நகராம் அமராவதிக்கு ஒப்பாகும் இவ்வூர் என விளங்கி அழகு நிறைந்துள்ள திருக்கழுக்குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (நற்றொண்டர்க் கிணையாக உன் அருள்தாராய்) 325 ஏழுலகையும் தமது நாபியிடங் (கொப்பூழிற்) கொண்ட திருமால், பிரமர், சோதி உருவம் விளங்கும் அரன், இவர் மூவர் முதலான பிறதேவர்கள், இவர்கள் யாவருக்கும் 'தலைவி எனப்படும் ஆதி பராசக்தியின் கொங்கையில் ஊறி எழுந்த அமுதம் (ஞானப்பால்) மணக்கும் இனிமை வாய்ந்த வாயை உடையவனே! புழுகு (வாசனைப் பண்டம்) நிறைந்துள்ள சீகாழியில் கவுணியர் குலத்தில் ஞான பரிசுத்த மூர்த்தி (ஞானசம்பந்தன்) எனத் தோன்றி (சமணரொடு செய்த வாதில் வைகையாற்று நீர் வெள்ளத்தில் இட்ட) ஏடு - அதன் கண் இருந்த தமிழ்ப் பாசுரத்தின் மகிமையாலே சம்பந்தர் வரலாறு - பாடல் 103,110, 181 பார்க்க