உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/789

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை புனலிலெதி ரேற சமணர்கழு வேற பொருதகவி வீர குருநாதா, மழுவுழைக பால டமரகத்ரி சூல மணிகரவி நோத ரருள்பாலா. 'மலரயனை நீடு சிறைசெய்தவன் வேலை வளமைபெற வேசெய் முருகோனே; tகழுகுதொழு வேத கிரிசிகளி வீறு கதிருலவு வாசல் நிறைவானோர். கடலொலிய தான மறைதமிழ்க ளோது கதலிவன மேவு பெருமாளே, (2) 'பிரணவத்துக்குப் பொருள்தெரியாத பிரமனைச் சிறையிலிட்டு அவனது சிருட்டித் தொழிலை முருகவேள் தாமே செய்தார் - (பாட்டு 215) 'மறைமுத லவனை முன்னோர் வைகலின் வல்லி பூட்டிச் சிறையிடை வைத்துத் தானே திண்புவி யளித்து" "பரம்பொருள் மகன் ஓர் திரு முகங்கொடு சதுர்முகன் போல் விதிசெய்தான்" (கந்த புரா - IV, 7.25; 1 - 16 - 17) பிரமனுடைய வேலையை வளம்பெறச் செய்தார் முருகவேள் - அவர் படைத்த உயிர்கள் நன்குணத்தவராய்ப் பேறு பெற்றனர்; "செவ்வேள் முற்றுமத் தொழிலிற் பட்ட மூதுயிர் பெற்ற பேற்றை இற்றெனக் கிளக்கலாமே யெஃகறி வுடையார்க் கேனும்" - தணிகைப் வீராட்ட 83. tதிருக்கழுக்குன்றம் கழுகு குன்றம் - கழுக்குன்றம். இத்தலத்திற் கழுகு தொழுவது இன்றும் காணக் கிடக்கின்றது. சண்டன், பிரசண்டன் என்னும் கழுகுகள் கிருதயுகத்திலும், சம்பாதி, சடாயு என்னும் கழுகுகள் திரேதாயுகத்திலும், சம்புகுத்தன், மாகுத்தன் என்னும் கழுகுகள் துவாபர யுகத்திலும் பூசித்தன. சம்பு, ஆதி என்னும் கழுகுகள் கலியுகத்திற் பூசிக்கின்றன. வேதங்கள் சிவபிரானைப் பூசித்து "உனதடிக்கீழ் நிலைபெற நிறுத்தல் வேண்டும்" என வேண்டச், சிவபிரான் குன்றென நின்மின் நுங்கள் கொழுந்திடை அடைவோம் யாமும்" " நாமம் உங்கட்கு "வேதகிரி" யென ஞாலத் தோங்கும்" - எனக் கூறினர் . ஆகவே, திருக்கழுக்குன்றம் வேதகிரியாம்.