குன்று - கழுக்குன்றம் திருப்புகழ் உரை 317 நீரில் எதிர் ஏறிச் செல்ல, சமணர்கள் கழு ஏற, வாதப் போர் (தருக்கப் போர்) செய்த கவி வீரனே! குருநாதனே! , மான், கபாலம், தமருகம் (துடி), முத்தலைச் சூலம், மணிேே ஏந்தும் திருக்கரங்களை உடைய அற்புத மூர்த்தி யாம் சிவபிரான் அருளிய பாலனே! (தாமரை) மலரில் வீற்றிருக்கும் பிரமனைப் பெரிய சிறையில் வைத்து, பிரமனது சிருட்டித் தொழிலைச் செப்பம் உறவே செய்த முருகனே! கழுகு தொழுகின்ற வேதகிரி என்னும் (திருக்கழுக்குன்ற) மேை விளங்கும் ஒளி பொருந்திய ಘೀ வாசலில் (முன் புறத்தில்) கூட்டமாய் நிறைந்த தேவர்கள். கடலின் ஒலி போலப் பெரு முழக்குடன் வேதங்களையும் தமிழ்ப் பாக்களையும் ஒதுகின்ற (அல்லது - தமிழ் வேதங்களை, தேவார திருவாசகங்களை ஒதுகின்ற) t கதலிவனம் (வாழைக்காடு) எனப்படும் திருக்கழுக்குன்றத்தில் வீற்றிருக்கின்ற ப்ெரு. மாளே! 15 - ஆம் நூற்றாண்டிலிருந்த அருணகிரியார் காலத்தில் மறையும் தமிழும் கடலொலி போலத் திருக்கழுக்குன்றத்தில் முழங்கின. அவருக்குப் பின்னர் 17ஆம் நூற்றாண்டிலிருந்த அந்தகக்கவி வீரராகவ முதலியார் காலத்திலும் அங்ங்ணமே முழக்கொலி இருந்ததென. "முழாவொலி யாழொலி முக்க ணாயகன் விழா வொலி மணத்தொலி வேள்வி யாவையும் வழா வொலி மறை யொலி வானை யுங்கடந் தெழா வொலி கடல் கிளர்ந் தென வொலிக்கு மால்" என அவர் பாடிய பாடலால் தெரிகின்றது. (திருக்கழுக்குன்றப் புராணம். நகர -13) m t கதலிவனம் - ಶ್ಗ ஒரு பெயர்; இந்தத் தலத்து விருட்சம், வான்.ழ திருவிழாவில் 5ஆம் நாளன்று பகலில் வாழை விருட்ச வாகனம் உண்டு. வாழை இப்போதும் இங்கே இருக்கின்றது. துய கதலி வன மீதெனத் தொல்லை நாள் போய பழமை புதுக்குவார்" (திருக்கழுக்குன்ற உலா - 116) ஆடலின் இளைப்பைக் கதலிவனம் குளிர்ச்சியாற் போக்கும் என்றபடி "சாற்றும் வடவனத்தி லாடித் தனதிளைப்பு மாற்றுங் கதலி வனத்தினோன்" - கழுக்குன்ற உலா 20,
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/790
Appearance