உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/792

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - கழுக்குன்றம் திருப்புகழ் உரை 319 326 ஒலிக்கின்ற வண்டு தனாதனா என்றும் ஒலியுடனே தலையில் உள்ள (பு து மலரை நாடி) விழுகின்ற ஒழுங்கு பளிர் பளிர் எனப் பிரகாசிக்க, ஒசை தரும் காற் சிலம்பு கலீர் கலீர் என்று சப்திக்க, சுரத லீலையில் - (காமக் கலவி லீலையில்) ஒப்பற்ற கண்டத்தினின்றும் உண்டாகின்ற புட்குரல்கள் குகூ குகூ என்று ஒலிக்க, வேர்வை மிகவும் உண்டாகி, சலசல என வியர்க்க, மயிர்க்கூச்சு நிரம்பி அது சிலீர் சிலர் எனச் சிலிர்த்துப் புளகம் கொள்ள, அமுதம் (இந்திரியம்) மன்மதனது. இருப்பிடத்தினின்றும் குபிர் குபிர் என்றே வெளிவந்து பாய, உடம்பு காம இச்சையால் விருவிருப்பை அடைய, மாலை முத்து (முத்து மாலை) அணிந்தவராய்க் கலவியின்பம், கொள்க, கொள்க எனச் சேருகின்ற (பொது) மாதர்களின் ஆசையில் நன்கு கலந்து அடிக்கடி பிறவிக் கடலில் ஆழ்ந்து எழுதல் உண்டாகாமல் (பிறவி யற), உள்ளம் உனது ஆறெழுத்தை நினைந்து, (வாய்) குகா குகா என்னும்படியான மனப்பான்மையைப் பெறும் (பாக்கியம்) எனக்கு வராதோ! மாலை அணிந்த தலைகள் (ரத்தம் பெருகுவதால்) செக்கச் செவேலென ஆக, வேல் போல் கூரியதாய் எழுந்துள்ள பற்கள் வெள்ளை வெளேலென ஒளிதர, வெற்றி பெற்றிருந்த தோள்கள் கன்னங்கறேலெனக் கரிந்து போக, எதிர்த்து வந்த சூரனுடைய மார்பு முழுமையும் நெரிபட்டு மிகக் கரிந்துபோக, பேய்கள் (உணவு கிடைத்த தென்று களிப்பினால்) குதித்து மகிழும்படி மாமிசங்கள் கும்பல் கும்பலாய்க் கிடக்க, (அசுரர்கள்) வாய் அடைந்து விழுந்து ஐயோ ஐயோ என்று அழ, ரத்தம் ஆறாகப் பெருக