உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/793

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை வேலை வற்றி வறண்டு சுறீல் சுறிலென மாலை வெற்பு மிடிந்து திடீல் திடீலென மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயா ஐயாவென விசைகள்கூற. வேலெ டுத்து நடந்த திவா கராசல வேடு வப்பெண் மணந்த புயா சலாதமிழ் வேத வெற்பி லமர்ந்த க்ருபா கராசிவ குமரவேளே. (3) 327. புத்தி பெற தான தத்த, தான தத்த, தான தத்த தனதான வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு மபிராம. வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை முடிதோய, ஆத ரித்து வேளை புக்க ஆறி ரட்டி புயநேய. ஆத ரத்தொ டாத ரிக்க ஆன புத்தி புகல்வாயே: 'காது முக்ர வீர பத்ர காளி வெட்க шое, тирт உமையவள். பத்திரகாளியை நல்க துங்க வீரபத்திரன் தனை அடைந்தனள் துணையாய் கந்த புரா - வீரபத்திர 15. இந்தக் காளி நானும்படி ஆடலில் அவளை வென்றனர் சிவபிரான் மகிடாசுரனைக் காளி சங்காரம் செய்தபின் பெருஞ் செருக்குக் கொண்டு உலகை அழிக்கத் தொடங்கினள். அவள் செருக்கை அடக்கச் சிவன் அவளை வெல்லும் பொருட்டுத் திருவாலங்காட்டில் நடனம் பல செய்ய அவளும் உடனுக்குடன் ஆடிவர, சிவபிரான் தனது காதிற்கழன்ற குண்டலம் தானே சேர்ந்திடுமாறு காலைக் காதளவும் தூக்கி நடனம் புரிய, பெண் பாலான அவள் அங்ங்னம் காலைத் தூக்க நாணித் தோற்றுச் செருக்கு அடங்கி நின்றனள். "கொடிய வெஞ்சினக் காளியிக் குவலய முழுதும் முடிவு செய்வனென் றெழுந்த நாள் முளரியான் முதலோர் அடைய அஞ்சலும் அவள் செருக் கழிவுற அழியாக் கடவுள் ஆடலால் வென்றதோர் வடவனம் கண்டான்" (கந்தபுரா - வழிநடை 8) "அடிபெயர்த் தாடல் செய்ய அருகுறுங் காளி நோக்கி ஒடிவுறு நாணின் மேவி ஒளிமுகம் இறைஞ்சி ஒல்கி வடிவுறு பாவை போலச் செயலற மயங்கி நின்றாள்" (திருவாலங்காட்டுப் புராணம்) "ஏழை அறிவேனோ குழைநக்கும் பிஞ்ஞகன்தன் கூத்து (திருவள்ளுவர்)