பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/795

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை காச முட்ட வீசி விட்ட காலர் பத்தி 'யிமையோரை, ஒது வித்த நாதர் கற்க வோது வித்த மு.நி.நான tஒரெ ழுத்தி லாறெ ழுத்தை யோது வித்த பெருமாளே. (4) பத்தி இமையோரை ஒதுவித்த நாதர் - சிவபிரான்; அவர் (தேவர்களுக்கு வேதத்தைத் திருவோத்தூரில் உபதேசித்தார். இத்தகைய மாமறை நூல் முன்னாளித் திருக்காஞ்சி வரைப்பிற்றென்சார், தத்துநீர் அலை புரட்டுஞ் சேயாற்றின் தடங் கரைக் கண் இமையோர்கட்கும், மெய்த்தவர்க்கும் ஒதுவித்தோம் ஆதலினால் மேவு திரு வோத்து ரென்னும், அத்தலத்தில்" - காஞ்சிப்புரா - திருவேகம்ப 80 "ஒது வித்த முதி - சிவபிரான் ஒதுவித்த முநி - பிரமன் வேதத்தைச் சிவபிரான் பிரமனுக்கு ஒதுவித்தார். என்பது மையுலா வரு களத்தினன் அளப்பிலா மறைகள் பற்பலபுரிந்ததிற் சில யான் உய்யுமா றருள் செய்தனன் அவையுணர்ந்துடையேன்" எனப் பிரமன் கூறுவதால் தெரிகின்றது. கந்தபுரா அயனைச் சிறை 7 முதி என்பது பிரமனைக் குறிக்கும்.அருநெறிய மறைவல்ல முநி: சம்பந்தர்-1 - 1-1 அருமா மறை வல்ல முநிவன் - II 8.9 (சம்பந்தர்) நாதர் கற்க முருகவேள் ஒதுவித்தார்: "மைந்த எமக்கருள் மறையின் என்னாத் தன் திருச் செவியை நல்கச் சண்முகன் குடிலை யென்னும் ஒன்றொரு பதத்தின் உண்மை உரைத்தனன்" . கந்தபுரா , 1-17-39 பிரமன் பொருள் தெரியாது வெட்கமுற்றது - உரை பொருளென நவில மிகைத்த கண்களை விழித்தனன் வெள்கினன் விக்கித் திகைத்திருந்தனன் கண்டிலன் அப்பொருட் டிறனே கந்த புரா - 1-16:10, f ஒ ரெழுத்து ஓம்’ என்பது. "ஒ மெனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி - திருமந்திரம் 2676 "ஒ மெனும் ஒரெழுத்துள் நின்ற ஓசைபோல்" - திருமந்திரம் 2824; இதனை 'மறை எவற்றிற்கும் ஆதியின் நவில்வான நின்றதோர் தனி மொழி" என்ப. கந்த புரா - 1. 16-8. 'ஓம்' எனினும் ஒரெழுத்தினின்றே ஒம் நம சிவாய' என்னும் ஆறெழுத்து விரியும் எனக் காட்டி விளக்கினர் முருகவேள். (அடுத்த பக்கம் பார்க்க)