உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/796

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - கழுக்குன்றம் திருப்புகழ் உரை 323 ஆகாசத்தை முட்டும்படி (அவ்வளவு உயரம்) வீசி விட்ட (ஆடின) பாதத்தர், பத்தியுள்ள தேவர்களுக்கு (வேதத்தை) ஒதுவித்த (கற்பித்த) நாதராகிய சிவபிரான் கற்க (உன்னிடம் பாடம் கேட்கவும்), அவரால் (சிவபிரானால்) ஒதுவிக்கப்பட்ட முநி (பிரமன்) வெட்கமடையவும். ஓரெழுத்தாகிய (பிரணவத்தில் ஓம் - என்பதில் ஆறெழுத்தும் (ஒம் நமசிவாய என்னும்) ஆறெழுத்தும் அடங்கி உளதென்று விளங்கக்காட்டி (அந்தச் சிவனுக்கு) உபதேசம் செய்த பெருமாளே! (ஆதரத்தொடாதரிக்க ஆன புத்தி புகல்வாயே) முன்பக்கத் தொடர்ச்சி ஒரெழுத்தாகிய ஒம் என்பதே அஉம என்னும் மூன்றெழுத்தாய், அம் மூன்றுங் கூடி ஒம் என்று எழுதும் போது விந்துவாயும் ஒம் என்று உச்சரிக்கும் போது நாதமாயும் விரிதலால், அ.உம என்னும் மூன்றெழுத்தும், விந்து நாதங்களாகிய வரிவடிவும் ஒலி வடிவுங்கூடி ஐந்தெழுத்த்ாயிற்று ஆகவே பிரணவமே (ஒம் என்பதே பஞ்சாக்கரமாம். பூர் பஞ்சாக்கர விளக்கம் பக்கம் 9 ஓங்காரமாம் ஐந்தெழுத்தாற் புவனத்தை உண்டு பண்ணி தாயுமானவர் ஒம் என்னும் இவ்வோரெழுத்தொடு நம சிவாய' என்னும் பஞ்சாக்கரம் கூட ಳ್ಗ து விரியும் என்ப. ஒம் என்னும் ஒரெழுத்தின் விரிவு மேற் கூறியவாறு ஆக, சிவாயநம என்னும் ஐந்தெழுத்தும் பின்வருமாறு விரியும் சிகாரம் சிவத்தையும், வகாரம் அருட் சத்தியையும், யகாரம் ஆன்மாவையும், நகாரம் திரோதானத்தையும், மகாரம் ஆணவ மலத்தையும் உணர்த்துவனவாம் . சிகார வகாரங்கள் பதியையும், பகாரம் பசுவையும், நகார மகாரங்கள் பாசத்தையும் விளக்குவனவாம் (பூ பஞ்சாக்கர H விளக்கம் - பக்கம் 13) "தகதி யெனுங் குண்டலியில் அழலோம்பி நகர திரோதானத தோடே, மகர மலம், யகரம் உயிர், சிகர மிசை, சத்திமற்றை வகர மாகும், நகர மகரங்களந்த யகர முற வகையினடு வணைய தாகுஞ் சிகர வக ரங்கடனை முதலாயஞ் செழுத்துரைத்தான் செங்கை வேலான்" - திர்த்தகிரிப்புராணம் . கந்த தீர்த்த 36. s ஆகவே ஓரெழுத்தை (ஒம் என்பதை விளக்கி அதன் விரிவாக ஒம் நமசிவாய' என்னும் ஆறெழுத்தையும் சிவபிராற்கு விளக்கினர் முருகவேள். முழுதுணர்ந்தும் உணர்வரியதொன்றை ஓம்மொழியில்விண்ட சிறுபிள்ளை" முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் 4