பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/799

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை பீலிமயில் மீது றைந்து தரர்தமை யேசெ யங்கொள் பேர் பெரிய வேல்கொள் செங்கை முருகோனே! பேடைமட ஒதி மங்கள் கூடிவிளை யாடு கின்ற பேறை நகர் வாழ வந்த பெருமாளே. மயிலம் (தென் ஆற்காடு மாவட்டம் மயிலம் புகைவண்டி நிலையத்திலிருந்து 3-மைல்) 328. திருவடியைப் பெற தனதந்த தானன தானா தானா தனதந்த தானன தானா தானா தனதந்த தானன தானா தானா தனதான கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோ விடமிஞ்சு பாதக வ்ேலோ சேலோ குழைகொண்டு லாவிய மீனோ மானோ எனுமானார். குயில்தங்கு மாமொழி யாலே நேரே யிழைதங்கு நூலிடை யாலே மீதுார் குளிர்கொங்கை மேருவி னாலே நானா விதமாகி, உலைகொண்ட மாமெழு காயே மோகா யலையம்பு ராசியி னூடே மூழ்கா வுடல்பகுத்ச பாதக மாயா நோயா லழிவேனோ. உறுதண்ட பாசமொ டாரா வாரா எனையண்டி யேநம னார்து தானோர் உயிர்கொண்டு போய்விடுநாள் நீ மீதா எாருள்வாயே! அலைகொண்ட வாரிதி கோகோ கோகோ எனநின்று வாய்விட வேநீள் மாசூ ரணியஞ் சராசனம் வேறாய் நீற்ள் யிடவேதான். 'சராசனம் - வில்.