பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/806

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - சிராப்பள்ளி திருப்புகழ் உரை 333 330 ஐயோ! மனமே! (நீ) நம்முடைய உடலை நம்பாதே! (ஏஇன்னில் இவ்வுடல்) இதத்துக்கும் இன்பத்துக்கும்) அகிதத்துக்கும் (துன்ப ಅಲ್ಲಿ இடந்தரும் ஒரு பொறி (யந்திரம்); தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன் ஆய்ந்து செய்த ஒரு பூட்டு இது (இந்த உடல்); இனிமேல் நாம் (என்ன் செய்ய வேண்டுமென்றால்) (அஞ்சுதல் ல்லாமல்) பயப்படாமல் அமையா (அமைந்து) பொருந்தி யிருந்து, (கிரவுஞ்ச) மலையின் உடலைப் (பஞ்சாடிய) சிதற அடித்த (தூளாக்கிய) வேலவர்க்கு (இயல்) உழுவல் அன்பு, (அங்கு ஆகுவம் வா இனிது) (நினைத்த அவ்விடத்திலேயே) உடனே கொள்வோம் வா இன்பத்துடனே! க்கையை ஒழியாமல் (இந்த உடலை வீணாக் கழித்து ஒழித்து டாமல்); (இவ்வுடலை வீணாக்காமல் வேலவர்க்கு அன்பு அடிமைப் படுவோம் வா - என்றபடி). (அங்ங்னம்) அன்படிமைப் பட வந்து விட்டோம்; இது தான் நற்கதி தந்து (ஆண்டவன்) நம்மை ஆள்வதற்கு (உற்ற வழி); இந்தா (இதோ பார்)! மயில் வாகனப் பெருமான் ஆளுவோம் என்றதற்கு அறிகுறியாக (அவர்) தந்த சீட்டும், வந்து ஆட் கொள்வோம் நாம் எனக் கூறிக் கட்டித்தந்த சிவ நீறும் (சிவ நீற்றுப் பொட்டணமும்)! (ஆதலால் அவர்) வந்து அநேகமாய் நம்மை ஆட்கொள்ள மகிழ்ந்துள்ளார். (என்பது நிச்சயம்); (இக்காரணத்தால்) இதனினும் பெரிதாக மதிக்க்த்தக்க பேறு அல்ல்து மகிழ்ச்சி ஏது இனி உண்டு நாம் அடைவதற்கு (அல்லது நாம் மேற் கொள்ள வேண்டிய சமய வழிபாடு வேறு என்ன இருக்கின்றது) - ஒன்றுமில்லை என்றபடி, (ஆதலால் மனமே நீ) "மைந்தா குமரா" "மைந்த குமரா மைந்தா குமரா" என்னும் ஆர்ப்பை (நிறை பேரொலியை) உய (உய்ய) ஈடேற வேண்டி மற்வாமல் ஒதுவாயாக. - திந்தோதிமி தீதத என்று சிறந்த உடுக்கையும் தந்தாதன னாதன தாத்தன என்று செவ்விய (பூரிகை) ஊது குழலும், பேரிகை (முரசும்) சப்தித்து ஒலிய்ை எழுப்ப, வேத்ங்கள் முழங்க,