உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/814

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . சிராப்பள்ளி திருப்புகழ் உரை 341 விளங்க வீற்றிருக்கும் வீரனே! அழகிய உருவுடன் விளங்கும் (சிராமலைக்) குன்றுடையவராம் தாயுமான சிவபிரானிடம் நெற்றிப் பொட்டுப் போலச் சிறந்து வெளித் தோன்றிய பெருமாளே! (தூர்த்தனை விடலாமோ) 332 மேல்மேல் அழுது, ஒழுக்கம் வாய்ந்த நண்பு உடையவர் போலப் பொய் வழியிலேயே சூழ்ச்சி செயும் மூடர்கள், தம் மீது ஆசைப்படும் காமுகர்கள் (தூர்த்தர்கள்) தமக்குப் பொன் கொடாத நாளில் அவர்களோடு வாய் பேசாதிருத்தலும், கோபித்தலும் நீங்காத குற்றம் உடையவர்கள், எல்லை யில்லாத (முடிவு இல்லாத) காசாசை கொண்ட வேசைகள், விஷம் தோய்ந்துள்ள கண்களினால் மாட வீதிகளில் கொங்கையை ஆராயாமல் எவரோடும் விலைக்கு விற்கும் மகாமாய உருவினர், நற்குணம் இல்லாத காமிகள், பேய் பிசாசோ என்று சொல்லும்படி குறை சொல்லிக் ( கூச்சலிட்டுக்) கும்மாளம் போடும் (கூத்தடிக்கும்) விகாரத்தினர் இத்தகைய பொது மாதர்களின் சூழ்ச்சிச் செயல்களாலே என் உயிர் வருந்தலாமா!