பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/813

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை "தெரியஇ ருந்தய ராக்ரம உருவளர் tகுன்றுடை யார்க்கொரு தில்தமெ னும்படி தோற்றிய பெருமாளே. (3) 332. பொது மகளிரால் வரும் கலக்கம் அற தனதன தானான தானன தனதன தானான தானன தனதன தானான தானன தந்ததான அழுதழு தாசார நேசமு முடையவர் போலேபொய் சூழ்வுறும் அசடிகள் மாலான காமுகர் பொன்கொடாநாள். அவருடன் வாய்பேசிடாமையு முனிதலு மாறாததோவிகள் அறுதியில் காசாசைவேசைகள் நஞ்சுதோயும்; விழிகளினால்மாடவீதியில் முலைகளையோராமலாரொடும் விலையிடுமாமாய ரூபிகள் பண்பிலாத விரகிகள் வேதாள மோவென முறையிடு கோமாள முளிகள் வினைசெயலாலேயெ னாவியு யங்கலாமோ,

  • சிராப்பள்ளி மலை மீதே தெரிய இருந்த" இங்ங்ணமே 342 ஆம் பாட்டில் திரிசிரகுன்றில் முதனாளில் தெரிய இருந்த பெரியவர்' என்றதையும் காண்க. திரிசிரன் என்னும் அரக்கன் பூசித்த காரணத்தால் திரிசிராமலை எனப் பெயர் போந்தது:

வாயுவுக்கும் ஆதிசேடனுக்கும் நடந்த பலப் போட்டியில் ஆதிசேடன் தனது பட்த்தால் மூடியிருந்த கயிலைக் கொடு முடிகளில் மூன்று சிகரங்களை வாயு அடித்துத் தள்ளிற்று அவை தாம் திருக்காளத்தி, திரிசிராமலை, (ஈழ் நாட்டுத்) திருக்கோணமலை, இவை மூன்றும் தகூகின கைலாசம்' எனப்படும். முன்னர் வீழ்ந்திடு சிகரிகா ளத்தியா மொழிவர் பின்னர் வீழ்ந்தது திரிசிரா மலையெனும் பிறங்கல் அன்ன தின்பிற கமைந்தது கோணமா அசலம் இன்ன மூன்றையும் தகூதிண கயிலையென் றிசைப்பார் - (செவ்வந்திப் புராணம்) t குன்றுடையார் - இது நன்றுடையானை" என்னும் இத்தலத்து (சம்பந்தர் அருளிய) "சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூற என் உள்ளங் குளிரும்மே." - என்னும் தேவாரப் பகுதியின் 1981 ஞாபகத்திற் பிறந்த திருவாக்காம்.