உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/812

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - சிராப்பள்ளி திருப்புகழ் உரை 339 சரியை மார்க்கத்தையும் கிரியை மார்க்கத்தையும் அநுட்டித்து மேலான பதத்தைப் பெற விரும்புவார்க்கு அருளைத் தருகின்ற ரங்க கண்ணன் புர உசிதன் பூரீரங்கம் என்னும் திருக்கோயிலிற் பள்ளி கொண்டுள்ள மேன்மை யாளனாம் திருமாலின் மருகனே! (கிரெளஞ்ச) - கிரியைப் பொடிபடச் செலுத்தின கை. வேலை விளங்க ஏந்தி மயில் மீ து வந்து என்னை ஆட்கொண்ட திருவருளை உலகோர் அறியும் வண்ணம் (அன்று திருவண்ணா மலையிற்) காட்டிய குருநாதனே! 'முப்புவனங்களும் வணங்கி நின்ற (பல்லவ அரசன் (குணதரன் என்ற மகேந்திரவர்மன்), ராஜ ராஜ கேசரிவர்மன் முதலான iபல மன்னர்களால் கட்டப்பட்ட மண்டபக் கூட்டங்கள் (ஆயிரக்கால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபம் , பதினாறுகால் மண்டபம், மணி மண்டபம், சித்திர மண்டபம் முதலியன) தெருவிலே தோற்றந்தரும் திரிசிராப்பள்ளி மலை மேலே (முன்பக்கத் தொடர்ச்சி) "உலகினில் அனைவர்கள் புகழ்வுற அருணையில் ஒரு நொடி தனில்வரு மயில் வீரர்" என்னும் 75 ஆம் பாடலும் இதற்குச் சான்றாம். அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும்" என்னும் எனது நூலில் பக்கம் 17.20 பார்க்க 'முடியுடை வேந்தரான சோழருடைய இராசதானிநகரமாயிருந்த உறையூர் திரிசிராப்பள்ளிக்கு அருகில் உள்ளது. திரிபுவனந் தொழுபார்த்திபன்' என்றது ராஜராஜ சோழனாதிய வேந்தர்களுள் திரிசிராப் பள்ளியில் மண்டபம் முதலிய கட்டுவித்துத் திருப்பணி செய்த ஒருவரைக் குறிக்கின்றது போலும் tதிரிசிராமலைக் கோயில் வரலாறு-பக்கம் 12-17 பார்க்க