உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/811

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை "சரியையு டன்க்ரியை போற்றிய பரமப தம்பெறு வார்க்கருள் தருகணன் ரங்கt பு ரோச்சிதன் மருகோனே.

  1. சயிலமெ றிந்தகை வேற்கொடு

மயிலினில் வந்தெனை யாட்கொளல் சகமறி யும்படி காட்டிய குருநாதா: திரிபுவனந்தொழு பார்த்திபன் மருவிய மண்டப கோட்டிகள் தெருவில்வி ளங்குசிராப்பளி மலைமீதே "(1) திருக்கோயிலில் திரு அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடங் கண்டு பணிதல். இவை சரியையாம். இது சாலோகம் தரும் ; இது தாத மார்க்கம். (2) பூசை உபகரணங்களை அமைத்துப் பரஞ்சோதியை அருச்சித்து நித்யாக்கினி காரியம் செய்தல் - கிரியை - இது சாமீபம் தரும்; இது புத்ர ITTஆங்கியம். ' (3) புலன்களை அடக்கிப் பிரான வாயுவைச் சலனமற நிறுத்தி ஆறாதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை தேக முழுவதும் நிரப்பி, முழுச்சோதியை நினைத்திருத்தல் யோகம்; இது சாரூபம் தரும். இது சக மார்க்கம் (தோழ நெறி). 4. புறத்தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரையானே, செய்யும் வழிபாடு ஞானம். இது சாயுச்யம் தரும் - இது சன்மார்க்கம் சிவஞான சித்தியார்- 8-சூத்-19-22. t புரம்- கோயில் "மூவர்க் கோதிய புரமும்". கல்லாடம் 24, # சம்பந்தாண்டானொடு அருணகிரியார் வாது செய்த போது தேவியைச் சபையில் வரவழைப்பேன் என்ற சம்பந்தாண்டான் அங்ங்ணம் வரவழைக்க இயலாது தோல்வி யடைய, கந்தவேளை வரவழைப்பேன் என்ற சந்தப் புலவராம் நமது அருணகிரியார் "அதல சேடனாராட" என்னும் பாடலைப் பாடி "மயிலும் ஆடி நீ ஆடி வரவேணும்" (திருப்புகழ் 1056) என வேண்ட, அங்கனமே முருகவேள் (திரு அருணையிற்) சபையிற் காட்சி அளித்தார். அந்த வரலாறு இங்கே குறிப்பிக்கப்பட்டுளது: (அடுத்த பக்கம் பார்க்க) 26