பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/818

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . சிராப்பள்ளி திருப்புகழ் உரை 345 333 வாலிபர்களுடைய நெஞ்சுக்கு விலங்கு எனச் சொல்லத் தக்க சிற்றிடையைக் கொண்ட வஞ்சிக் கொடி போன்ற பொது மகளிரது. இணையடியைக் கும்பிட்டு, அழகிய அல்குல் எழுச்சி அடையச் செய்து, வாய் இதழ் அமுதத்தைப் பருகி அநு. பவித்து, அணியான முத் துமாலையும். கலவைச் சாந்தின் நறுமணமும் புளகிதமும் கொண்ட இன்பம் தருவதான, கனத்த கொங்கைக் குடத்தின் மத்தியிலே முழுகும். கலவி யின்பத்தை வெறுத்துத் தள்ளி, விளங்கும் உனது அழகிய திருவடியைத் தொழும் அன்பைத் தந்தருளுக. சோர்வு இலாத அன்பர்களுடைய உளம் என்னும் மன்றத்தில் (நடன சாலையில்), நான்கு மறைகளும் உரிய சந்தத்துடனே பாட (அல்லது அழகாய்ப் பாட) - தரிகிட தந்தத் திரிகிட திந்தித் தகுர்தி யென்னும் கொட்டு முழக்கத்துடன், நடனம் செய்து தெளிவு பெறும் வண்ணம் (அந்த அன்பர்கள் உள்ளத்தே) வந்து, இருந்து, விளங்கும் சிவபெருமானது அன்புக்கு உரிய குழந்தையே! மாலையணிந்த அழகிய மார்பனே! செழுமறைகளை அழகாகச் சொல்லுகின்ற (ஒலிக்கின்ற) சிலம்பை அணிந்தவனே! வலிமை வாய்ந்த திரிசிரமலைப் பெருமாளே! (அன்பைத் தருவாயே)