உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/819

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 334. அலைச்சல் அற தனதன தத்தம் தனதன தத்தம் தனதன தத்தம் தனதான பகலவ னொக்குங் கனவிய ரத்நம் பவளவெண் முத்தந் திரமாகப் பயிலமு லைக்குன் றுடையவர் சுற்றம் பரிவென வைக்கும் பணவாசை அகமகிழ்_துட்டன் பகிடிம ருட்கொண் டழியும வத்தன் குணவீனன். அறிவிலி சற்றும் பொறையிலி பெற்றுண் டலைதலொழித்தென் றருள்வாயே! சகலரு மெச்சும் பரிமள பத்மந் தருணப தத்தின் சுரலோகத் தலைவர்ம கட்குங் குறவர்ம கட்குந் தழுவஅ னைக்குந் திருமார்பா, செகதல மெச்சும் புகழ் வய லிக்குந் திகுதிகெ னெப்பொங் கியவோசை திமிலைத.விற்றுந் துமிகள்மு ழக்குஞ் சிரகிரி யிற்கும் பெருமாளே (6) 'வயலிக்கும் சிரகிரியிற்கும். உருபு மயக்கம். நான்காம் வேற்றுமைக் குவ்வுருபு இடப்பொருளாய், கண்ணுருபாக நிற்கின்றதெனக் கொள்ள ல்ாம் வந்து வைகிற்றிவ் வார் பொழிற்கே திருக்கோவையார் 120 கிழங்கு மணற்கின்றி. அகநானூறு 212 - என்புழிப்போல, நன்னூல் குத்திரம் 317 வயலூர் திரிசிராமலைக்கு ஆறு மைல் தூரத்தில் உள்ள பிரபல முருகர் ஸ்தலம், அருணகிரிநாதருக்கு அண்ணாமலையில் குருமூர்த்தமாய் அருளின முருகவேள் வயலூரில் மறுமுறை அனுக்கிரகித்த தலம் வயலூர் ஆன்மையில் இருப்பதால் திரிசிராப்பள்ளிப் பதிகங்களில் வயலூர் அதிகமாக வரும் 334 ஆம் பாடலில் வயலூர் சிராப்பள்ளி இரண்டு தலங்களும் இணைத்துப் பாடப்பட்டன.