உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/820

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . சிராப்பள்ளி திருப்புகழ் உரை 347 334 சூரியனைப் போன்று ஒளி வீசும் பெருமை வாய்ந்த ரத்னம், பவளம், வெண் முத்து (மாலைகள்) திடமாக (நன்றாக) நெருங்கி விளங்கக் கொங்கை மலையை உடையவர் களுடைய கூட்டமே அன்புக் கிடமென வைக்கின்ற (துவுடன்) பண ஆசையில் உள்ளம் களிக்கின்ற துஷ்டன், வெளி வேஷக்காரன், மோக மயக்கம் கொண்டு அழிகின்ற வீணன், இழிகுணத்தோன், அறிவில்லாதவன், சிறிதேனும் பொறுமை இல்லாதவன் (இத்தகைய நான்) (பொருள் தேடிப்) பெற்றும், உண்டும் அலைகின்றேன். அங்ங்னம் அலைதலை ஒழித்து என்று எனக்கு அருள்வாய்! * யாவரும் மெச்சும் நறுமணமுள்ள தாமரை போன்ற இளமை வாய்ந்த திருவடிகளை உடையவனே திண்ணிய தேவலோகத் தலைவரான இந்திரன் மகள் (தேவ சேனைக்கும்) குறவர். மகள் (வள்ளிக்கும்) தழுவ அணைக்கத் தருகின்ற அழகிய மார்பனே! (அல்லது அவர்கள் இருவரும் (உன்னைத்) தழுவ அவர்களை (நீ) அணைந்து தழுவும் திருமார்பனே): பூவுலகம் மெச்சுகின்ற புகழ் வாய்ந்த வயலுாரிலும் தகுதிகெனப் பொங்கி யெழும் ஒலி கொண்ட திமிலை (ஒருவகைப் பறை), தவில் (மேள வகை) துந்துமிகள் (பேரிகைகள்) - முழக்கம் செய்யும் திரிசிராமலை யிலும் (விளங்கும்) பெருமாளே! அல்லது வயலூருக்கும், திரிசிரகிரிக்கும் (பெருமானாய் விளங்கும்) பெருமாளே! (அலைதல் ஒழித்தென் றருள்வாயே)