உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/821

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை 335. திருவடியைப் பெற தனதனன தந்த தனதனண தந்த தனதனன தந்த தனதான ஒருவரொடு கண்கள் ஒருவரொடு கொங்கை ஒருவரொடு செங்கை யுறவாடி ஒருவரொடு சிந்தை ஒருவரொடு நிந்தை ஒருவரொடி ரண்டு முரையாரை; மருவமிக அன்பு பெருகவுள தென்று மனநினையு மிந்த மருள்தீர. வனசமென வண்டு தனதனன வென்று மருவு சரணங்க ளருளாயோ, அரவமெதிர் கண்டு நடுநடுந டுங்க அடலிடுப்ர சண்ட மயில்வீரா. அமரர்முத லன்பர் முநிவர்கள்வ ணங்கி அடிதொடிவி ளங்கு 'வயலூரா; tதிருவையொரு பங்கர் கமலமலர் வந்த திசைமுகன்ம கிழ்ந்த பெருமானார். திகுதகுதி யென்று நடமிட முழங்கு த்ரிசிரகிரி வந்த பெருமாளே (7) 'செய்ப்பதியும் (வயலூரையும்) வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு" (திருப்புகழ் விநா3) எனக் கட்டளை பெற்றா. ராதலின் திரிசிராப்பள்ளி ஆதிய தலங்களில் வயலூரா" என மறவாது முருகனை அழைக்கின்றார். t திருவை ஒரு பங்கர்- திருமாலைக் குறிப்பதாகக் கொள்ளலாம். (இலக்குமியை) மார்பிலே அல்லாமல் ஒரு பங்கில் (ஒரு பக்கத்தில்) உடையவர் என்றும் நூல்கள் கூறும்: "திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ" - பெரிய திருமொழி 3-10-1. திரு.பார்வதியாகவும் கொள்ளலாம்: "பேழைவார்சடைப் பெருந் திருமகள் தனைப் பொருந்தவைத் தொருபாகம் " - சம்பந்தர் II-107.6.