உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/822

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . சிராப்பள்ளி திருப்புகழ் உரை 349 335 ஒருவரொடு கண்கொண்டு (உறவாடியும்) (அதாவது ஒருத்தரைக் கண்ணால் அழைத்தும்), ஒருவரொடு கொங்கை கொண்டு (உறவாடியும்) (அதாவது ஒருத்தரை மார்பில் அணைத்தும்), ஒருவரொடு செங்கை கொண்டு (உறவாடியும்) (அதாவது ஒருத்தரொடு கைகுலுக்கியும் கையால் அழைத்தும்). த்தரொடு சிந்தை கொண்டும் (அதாவது ஒருத்தரை மனத்தில் வைத்து விரும்பியும்), ஒருத்தரை தூசணம் செய்து வெறுத்தும், ஒருத்தரொடு விருப்பு வெறுப்பு இரண்டும் காட்டாமல் மெளனம் சாதித்தும் இருக்கின்ற பொது மகளிரைச் சேர்தற்கு மிக்க காதல் பெருக உள்ளது என்று மனத்தில் நினைக்கின்ற இந்த மோக மயக்கம் தொலைய் (நீங்க) . (எனக்கு நீ) - தாமரையென நினைத்影 வண்டுகள் தனதனன என்னும் ஒலியுடன் வந்து பொருந்துகின்ற (உனது) திருவடிகளை அருள மாட்டாயா! பாம்பு (தன்னை) எதிரில் கண்டதும், நடு நடுங்கும்படி தனது வலிமையைக் காட்டும் கடுமைவாய்ந்த மயில் வீரனே! தேவர் முதலான அன்பர்களும் முநிவர்களும் வணங்கி உனது திருவடியைத் தொழ விளங்குகின்ற வயலூர்னே! க்குமியை ஒரு பாகத்தில் உடைய திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் (அல்லது திருமாலின் உந்திக் கமலத்தில் வந்த ಶ್ಗ (பிரமனும்) மகிழ்ந்து போற்றும் பெரு. மானார் (சிவபிரான்) அல்லது, திருவ்ை (ல்ட்சுமீகரம் பொருந்திய மாதை - பார்வ்தியை) ஒரு பங்கில் (இடது பாகத்தில்) உடையவர்.பிரமன் மகி ழ்ந்த பெருமானார் (சிவபிரான்) திகுதகுதி என்று நடன மிட (முழவு முதலிய வாத்தியங்கள்) முழங்குகின்ற திரிசிராப்பள்ளியில் எழுந்தருளியுள்ள பெரு. மாளே! (சரணங்கள் அருளாயோ)