உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/828

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . சிராப்பள்ளி திருப்புகழ் உரை 355 மலை உச்சியுங், கோபுரமும், அழகிய மண்டபங்களும், மகர மீனின் வடிவமைந்த அலங்காரத் தொங்கல்களும், ரத்ன சிங்காரங்களும் நிரம்பிய திரிசிராமலையில் எழுந்தருளியுள்ள அப்பர் (சிவபெருமான்) வணங்கிய பெருமாளே! (மோக சமுத்ரம் அழுந்துதல் ஒழிவேனோ) 338 (ஞான) சத்தி வேலை ஏந்திய திருக்கரத்தனே உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன், த்தியைத் தரவல்ல T:T மூர்த்தியே உன்னை வணங்குகின்றேன், வணங்கு. ன்றேன்; தத்துவங்களுக்கு ஆதி மூர்த்தியாய் விளங்குபவனே உன்னை வண்ங்குகின்றேன், வ்ணங்குகின்றேன்; விந்து - நாதம் (சத்தி-சிவம்) இவை யிரண்டின் சத்தான ரூபம் வாய்ந்தவனே உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன், ரத்னத்தின் பேரொளி விளக்கமே உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன். (யாவரும் அறிந்த அந்த (அல்லது தனக்குத் தானே நிகரான இயல்பாய்ப் பொருந்திய) கீர்த்திம்ானே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன் என்றெல்லாம் பாடித் துதிக்கும் பத்தியைப் பூணாமல், உலகத்திலே மாதர்களுடைய சவ்வாது, அகில், பசுஞ் சந்தனம் இவை அணிந்துள்ள கொங்கையின் மேலே விழுகின்ற கொண்டி மாடாகிய நான் உன்னை (இனி) விட்டு இராமல் சிவந்த தாமரை யனைய உனது சிறந்த திருவடியை இனியேனும் வந்து எனக்கு அருள்வாயாக; சத்தி வேலாயுதனே! தேவர்களுக்குத் தலைமை பூண்ட உக்கிர்ம் வாய்ந்த சேனாபதியே! பரிசுத்தமான தீர்த்த உபசாரங்கள் கொண்ட (அல்லது நெருப்பில் அர்க்கியம் இடப்படும்) சோமாசி யாக கர்த்தாவே (உபதேச) குரு பரம்பரைக்கு முதல்வனே! ‘சோமாசியா. யாக கர்த்தா. முருகவேளுக்கு " யாகரட்சக மூர்த்தி" என்றொரு பெயர் உண்டு, "ஒரு முகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ, அந்தணர் வேள்வி ஒர்க்கும்மே." - திருமுருகாற்றுப் படை, அந்தண் மறை வேள்வி காவற்கார திருப்புகழ் 41.