உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/832

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . சிராப்பள்ளி திருப்புகழ் உரை 359 340 இப்பூமியில் ஓர் அழகிய பெண்ணின் சிறிய வயிற்றில் கருவில் தோற்றம் உற்று, விதியின் ஆட்சியின்படியே கூடுகின்ற துக்கத்தையும், சுகத்தையும் அநுபவித்து, இறந்த பின் உயிரை, சூக்கும சரீரத்திற் புகுத்தி, அந்தத் தேகத்தைக் கட்டி, அழுந்தக் கட்டு, அடி, குத்து என்றெல்லாம் பயத்தை உண்டுபண்ணி, அலறி அழப் புரட்டி, வருத்தப்படுத்தி, (வாயில்) மணலைச் சொரிவித் து, நெருப் பினுள்ளே சூடேறும்படியாக விட்டு, அந்த உயிரைச் செக்கில் இட்டு அரைத்து, வரிசையாயுள்ள பற்களை உதிரும்படி அடித்து, எரி கின்ற செம்பாலாகிய உருவம் ஒன்றைத் தழுவும்படி பண்ணி (செய்து), முட்களில் கட்டி இழுத்து, வாயும், கண்ணும் கலங்கி அசையும்படியாக மோதி, மாமிசத்தை அறுத்து உண்ணும்படி செய்வித்து, (எலும்பை) ஒடித்து, நொறுக்கி நசுக்கி, வருந்தும்படி விலங்கு பூட்டி, துன்பப் படுத்தும் யம தண்டனை என்னும் துயரத்தை ஒழித்தருளுக. பிராண வாயுவை ஒடுக்கும் மனக்கவலையாம் மயக்கத்தை விலக்கி, சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் என்னும் (ஐவகையான) புலன்களில் வேகமாகச் செல்லுகின்ற ஆசையை ஒழித்த தவம் வாய்ந்த சரியையாளர்கள், கிரியையாளர்கள், யோகினர். மலபரிபாகம் பெற்றவர். மலம் அழிதற்குரிய பக்குவ நிலையினர் (ஞான முதிர்ச்சி கொண்டவர்கள்), நிட்டை (தியானம்), துறவு பூண்ட பரிசுத்தர்கள், உலகப்பற்று விட்டவர்கள் ஆகிய பெரியோர்கள் தத்தம் கருத்தில் வைத்துப் போற்றப்படும் குருநாதனே! வயலூரில் வீற்றிருக்கும் குரு நாதனே! பரமனுக்கும் (அல்லது மேலான) குரு நாதனே !