உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/836

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . சிராப்பள்ளி திருப்புகழ் உரை 363 குரு மூர்த்தியாய்க் கடாட்சிக்க (கடைக்கணித்தருள) வல்லவனே! கலை, வேதம், ஆகமம் ஆகிய சிறப்பான மொழிகளை உபதேசிக்கவல்ல ஞான சாரியனே! குறைகள் எல்லாவற்றையும் தீர்த்தருளும் சுவாமியே! வில்லை ஏந்திய வலிமையாளரான பொல்லாத வேடர்கள் கோ, கோ, கோ என்று கூச்சலிட்டு (கோ கோ என்னும் பேரொலியுடன்) உன்னைச் சூழ்ந்த போது அவர்கள் இறக்கும்படி எடுத்து நீட்டின கூரிய வேலாயுதனே! குருகு சேத்திர புரத்தில் (கோழியூர் என்கின்ற தலத்தில்): உறையூர் . (மூக்கிச்சுரத்தில்) வீற்றிருக்கும் ஈசனே வாசுகி (என்னும் பெரும் பாம்பும்) பயப்படும்படி எதிர்த்து போர் செயும் வீரத்தையுடைய மயில் வாகனனே! சரவணத்தில் தோன்றியவனே! பெருமையால் அழகு பெற்ற திரண்ட புயமலைகள் பன்னிரண்டு கொண்ட கந்தவேளே! (முன் பக்கத் தொடர்ச்சி) வேடர்மீது வேலை ஏவினர் என்பர் அருணகிரியார் 34ஆம் பாடலின் உரைக் குறிப்பைப் பார்க்க t குருகு கூேடித்ரபுரம் - என்பது கோழியூர் - உறையூர் - திருமூக்கிச்சுரம் எனப்படும். குருகு - கோழி, இங்கு யானையைக் கோழி வென்றமையால் இத்தலத்துக்குக் கோழியூர் என்று ஒரு பெயர். இந்தத் தலம் திரிசிராப்பள்ளிக்கு மேற்கு 1 மைலில் உள்ளது. S வாசுகி மயிலுக்கு அஞ்சுதல்: " வாளெயிற துற்ற புகுவாய் தொறு நெருப்புமிழும் வாசுகி எடுத்துதறும் வாசிக் காரனும்" - வேளைக்காரன் வகுப்பு. "கேகயம் - மயில். 1iதிரள் புய அத்திரி (மலை). பனிரண்டு புயமலை கிழவோனே" - திருப்புகழ் 975,