உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/842

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . சிராப்பள்ளி திருப்புகழ் உரை 369 நாசியால் (மூக்கால்) பிராணவாயுவை ரேசித்து (புறத்தே கழித்து) எட்டமுடியாத யோகிகள் நாடியும் காணுதற்குக் கூடாதது என நின்ற தலைவனே! சுரபுன்னை மரத்தின் கிளைகள்போய் உயர்ந்து மேகத்தைச் சேர்கின்ற திரிசிராமலை நாதர்க்குச் சாமியே குருநாதனே)! தேவர்கள் தம்பிரானே! (ஊனத்தைப் போடிடாது மயங்கலாமோ) 344 வெருட்டுதல் செய்து (வந்தவர்களை) ஆட்கொள்ள வல்ல (அடிமைப்படுத்தவல்ல) விஷமிகள், ஆடையைத் தளர்த்தி ஏமாற்றுபவர்கள், பொய் சொல்பவர்கள், வெகுவேகத்தில் (தம்மீது) விருப்பம் வரும்படி செய்ய வல்லவர்கள், தமக்குச் சேரவேண்டிய பொருளைக் கொடுக்க இயலாதவராயிருந்தால். (அப்படிப்பட்ட ஆடவர்களை) வெறுப்புடன் பார்ப்பவர்கள், வஞ்சனை எண்ணத்தவர்கள், நடனம் செய்யும் காலை உடையவர்கள், கொடி யோர்கள் ஆகிய பொது மகளிரின் கத்துாரி (ஆதிய) நறுமணம் வீசும், விசித்திரம் (பேரழகு) மேம்பட்டு விளங்கும் கொங்கையினும், நிற்கின்ற சாயலினும், யாரையும் மயக்குவித்து, ஆசைமொழிகளைச் சொல்லும் சொற். களிலும், கண்களிலும், அவிழ்ந்து விழும் பூ மணக்கும் கூந்தலினும், ஒளியினும், மதிக்கமுடியாத தளர்ந்த இடையினும், நடையினும் வீணாக நான் மயக்கங்கொண்டு (அப்பொதுமகளிருக்குக் கொடுப்ப தற்காக) பொருள் சேகரிப்பதற்காக வேண்டிய முயற்சிகளைச் செய்து கொண்டிருந்த சமயத்தில், (எனக்கு) வீடுபேற்றை அருளிய பல மலர்களும் நறுமணம் வீசும் பெருமை வாய்ந்த (உனது) திருவடியைக் கனவிலும் மறவேன், நனவிலும் மறவேன்.