உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/848

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருக்கற்குடி) திருப்புகழ் உரை 375 காட்டில் தினைப்புனத்தில் (இருந்த) குறத்தி (வள்ளியின் மேல்) மிகவும் கருத்தில் (எண்ணத்தில்) ஆசை கொண்டு அன்புடனே. மிகவும் காதல் பூண்டு (அவள் மையலில்) அகப்பட்டு, மை அணிந்த (அவளது) கண்ணின் கடையில் (கடைக் கண்ணில்) வசப்பட்டு நிற்பதற்கு ஆளானவனே! (சரவண) மடுவில் தோன்றிப், பொன்னுலகை வாழ்வித்த வீரம் பொருந்திய ஒப்பற்ற வேலனே! தமிழ்ப்பெருமாளே! கவி (ராசப்) பெருமாளே! புகழப்படும் வயலூர்ப் பெருமாளே! விருட்சங்கள் நிறைந்த கற்குடி மலைப் பெருமாளே! (பதத்தைத் தருவாயே) 346 (காமத்தால்) மனம் குழைந்து வளைவு பூண்டு, மலைக்கு ஒப்பான கொங்கைக்குப் பொருள் எல்லாவற்றையும் கொட்டி, நிரம்ப இன்பத்தை அனுபவித்து, அதில் அகப்பட்டு, பல நாளகளாக (அந்த இன்பத்தையே) நினைத்துக்கொண்டு (அதனால் வரும்) துக்கங்களுக்கும் அவஸ்தைகளுக்கும் (வேதனைகளுக்கும்) அடுக்கைப்பெற்று (ஆளாகி), உண்மைப் பொருளில் (செயலற்று) உறங்கின (உண்மைப் பொருளைக் காணாது தூங்கின. (காலங்கழித்த) அடியேனை அழுத்தமாகப் பிடித்தும், கட்டியும், உதைத்தும், துடி துடிக்கப் பற்றியும், இழுத்தும், மிதித்து இழுத்தும், (என்ன்ைச்) சூழ்ந்தும் யமதுாதர்கள் எனக்கு (என்னுடைய) கணக்குக்கட்டை விரித்துக் காட்டி (நான் இவ்வுலகிற் செய்த பாபச் செயல்கள் குறிக்கப்பட்டுள ஏட்டின் கணக்கு ஒலைக்கட்டை விரித்துக்காட்டி) . அந்தக் கணக்கில் உள்ள எண்ணிக்கைக்குத் தக்கபடியே