உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/850

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . இரத்னகிரி திருப்புகழ் உரை - 377 என்னை முறுக்கியும், திருப்பியும், சுட்டும், மலத்தில் புகுவித்தும், திட்டியும், (வைதும்), முழுமையும் கலக்க அந்தக் கலக்கத்தில் அகப்பட்டு நான் அலையாமல் அடியேனது மொழியையும், தகுதி (மேன்மை) உள்ள தமிழையும் அங்கீகரித்து (ஏற்றுக்கொண்டு), வீடுபேற்றைத் தரும் திருமுகத்தில் மகிழ்ச்சியுடனே மயிலில் ஏறித் தண்டிக்கும் கோபம் வாய்ந்த சக்திவேலைத் தகுதியுடன் திருக்கரத்தில் தோன்ற எடுத்து (அடியேன்) பக்கத்தில் வந்தருளுக உன்னைச் சொற்கொண்டு துதிப்பதற்குத் தகுந்த கருத்தைக் கொடுத்தருளுவாய்! (அட்ட) சித்திகளும் அணைந்துள்ள திருக்கற்குடிப் பெருமாளே! பக்தர் பெருமாளே! (பக்கல் வருவாயே) இரத்னகிரி 347 கயல்மீனொடு பொருது, பெண்மானை ஒத்து, மலராம் அழகிய தாமரையின் தன்மைகொண்ட, மை பூசின கண்ணினாலும். விளக்கமுற்று நெருங்கின மேகத்தை நோக்கிக் கோபித்து ஒளி வீசி எழுந்து திகழும் கரிய கூந்தலாலும். இனிமையும் அழகும் கொண்ட குடத்தையும், மலையையும், மேம்பாடு உள்ள நல்ல, பெரிய, கரகத்தையும் ஒத்த கொங்கை இரண்டாலும். (முன் பக்கத் தொடர்ச்சி) காளத்திமலை போலக் கற்குடி மலையும் சித்தி சம்பந்தப்பட்டது போலும். காளத்தியை "அட்ட மாசித்திகள் அணை தரு காளத்தி" என்றார் சம்பந்தர். t'பிணையேர் மட நோக்கு - திருக்குறள் 1089.