உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/860

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - விராலிமலை) திருப்புகழ் உரை 387 அழகு நிறைந்த மாடகூடங்கள் உள்ள மதுரை நகரில் (வெள்ளியம்பலத்தில் நடனமேடையின்மேல்) ஏறிக் கால் மாறி யாடின. இறையவராம் நடராசப் பெருமான் அருளிய ஏழேழு (நாற்பத்தொன்பது) சங்கப்புலவர்கள் (பொருள்) கூறிவந்த பொருளதிகாரத்தின் (இறையனார் அகப்பொருள் என்னும் நூலின்) உண்மைப் பொருள் இதுதான் என்று கூறத் . தகுதியுள்ள ஊமைப்பிள்ளை போலச் செட்டி குலத்தில் தோன்றி விளையாடி, திருவாலவாய் என்னும் ம துரைத் திருக் கோயிலில் (சங்கமண்டபத்தில்) (உண்மைப் பொருளை) நிலை நிறுத்திக் காட்டின திருவிளையாடலைப் புரிந்த ராய்ச்சி மிக்க திரனே! வரங்களைக் கொடுப்பவனே! # (முன் பக்கத் தொடர்ச்சி) சொல்லுங்கள் எவருடைய உரையை அவன் கொள்கின்றானோ அதுவே உண்மை உரை இதற்கு ஐயமில்லை, கவலை வேண்டாம்" என்றனர். ஊமை எங்கனம் பேசுவான் எனப் புலவர்கள் கேட்க, அந்தச் செந்தமிழ் தேர் செட்டிக்கு எவருடைய உரையைக் கேட்டால் உடலிற் புளகமும் கண்ணில் (ஆனந்த) நீரும் தோன்றுகின்றனவோ அந்த உரையே உரை, மற்றவை உரையல்ல எனக் கூறி மறைந்தனர். புலவர்கள் வியந்து அங்ங்ணமே அந்த ஊமைப் பிள்ளையைப் பத்தியுடன் வரவழைத்து, சிறப்புடன் சிங்காசனத்தில் அமர்த்தித் துப தீபம் தந்து, தத்தம் உரையை உரைத்தனர். வளமுறு கிரன் (நக்கீரன்), தரைபுகழ் கபிலன், மாசறு பரணன் இம் மூவர் உரையைக் கேட்ட போது ஊமை பெரு விருப்பைக் காட்டிப் புளகிதமும், துளிபடு கண்ணுமாய்ப் பொருந்தினன். அது கண்ட புலவர்கள் அதிசயித் து இம் மூவர் உரைத்த பொருளே உண்மைப் பொருள் எனக் கண்டு தங்கள் கலகம் தீர்ந்தனர். "அருந்தமிழ்ச் செட்டியாம் செட்டி இலகிய மயின் மீது அறு முகத்தோடும், இனிய பன்னிருகரத்தோடும், புலவர் கண்டிறைஞ்ச அருளினால் விளங்கிப் போயினான்" - இது திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில் 19. ஊமை தமிழறிந்த திருவிளையாடல் ஆகும். இவ் வரலாற்றைக் கந்தபுராண ஆசிரியர். திருத்தகு மதுரை தன்னிற் சிவன் பொருள் நிறுக்கு மாற்றால் உருத்திர சன்மனாகி உற்றிடும் நிமலன்" எனக் குறித்துள்ளார். (கந்த புராணம் - சூரபன்மா வதை 261). திருப்புகழ் 126, பாட்டு 234, பார்க்க