உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/861

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 'கூராழி யால்முன் வீய நினைபவ னிடேறு மாறு பாது மறைவுசெய் கோபால ராய னேய முளதிரு மருகோனே. கோடாம லார வார அலையெறி காவேரி யாறு பாயும் வயலியில் - tகோனாடு சூழ்வி ராலி மலையுறை பெருமாளே. (1) 351. நரகத்தில் விழாதவகை காத்தருள தானான தான தான தனதன தானான தான தான தனதன தானான தான தான தனதன தனதான பாதாள மாதி லோக நிகிலமு மாதார மான மேரு வெனவளர் பாடீர பார மான முலையினை விலைகூறிப். கூராழியால் பாது மறைவுசெய் எனக் கூட்டுக. வீய நினைபவன் . அருச்சுனன். (கண்ணபிரான் தமது ஆழியால் பாதுவைச் சூரியனை) மறைத்து அருச்சுனனைக் காத்த வரலாறு:- பாரத யுத்தத்தில் 13-ஆம் நாள் போரில் சயத்திரதன் அருச்சுனனுடைய பிள்ளை அபிமனைக் கொன்று விட்டான். இதை யறிந்த அருச்சுனன் " நாளைக்குச் சூரியன் அத்தமிப்பதற்குள் நான் அந்த சயத்திரதனைக் கொல்லாவிட்டால், தீயில் குதித்து இறப்பேன்" எனச் சபதஞ் செய்தான். இங்ங்ணம் சபதம் செய்ததை அறிந்த துரியோதனாதியர் சயத்திரதனைப் பகல் முழுதும் காத்திருந்தார்கள். அத்தமிக்கு முன்பாகக் கண்ணபிரான் தமது சக்கரத்தை விட்டுச் சூரியனை மறைத்தார். அஸ்தமித்துவிட்டது என்ற நினைத்து சயத்திரதன் தைரியமாய் வெளிவந்து நின்ற போது, கண்ணபிரான் அவனை அருச்சுனனுக்குக் காட்டிக் கொடுக்க அருச்சுனன் பாசுபதாத்திரத்தைவிட்டுச் சயத்திரனைக் கொன்றான். அத்தமித்த பின்பு அருச்சுனன் கொன்றது சத்திய விரோதம் என்று துரியோதனாதியர் கூறும்போது, கண்ணபிரான் சக்கரத்தைத் திருப்பி வரவழைக்க, உடனே சூரியன் பிரகாசித்தது. இதைக் கண்ட துரியோதனாதியர் ஏமாந்து போய் விட்டோமே. இது கண்ணபிரான் (அடுத்த பக்கம் பார்க்க)