உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/862

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - விராலிமலை திருப்புகழ் உரை 389 கூர்மையுள்ள சக்கரத்தால் - முன் (பாரதப்போர் நடந்த அந்தக் காலத்தில்) இறந்துபோவதற்கு எண்ணித் துணிந்த வனாகிய அருச்சுனன் உய்யுமாறு சூரியனை மறைத்து வைத்த கோபாலர்களுக்கு அரசனான கிருட்டிண பகவான் (திருமால்) அன்பு வைத்துள்ள அழகிய மருமகனே! (அல்லது அன்பு வைத்துள்ள இலக்குமியின் மருகனே!) தவறுதலின்றி ஆரவாரத்துடன் அலைகளை விசிவரும் காவேரியாறு பாய்கின்ற வயலூரிலும், t கோனாடு என்னும் நாட்டுப் பகுதியில் உள்ள விராலிமலையிலும் வீற்றிருக்கின்ற பெருமாளே! (நாளும் நினைவது பெறவேணும்) 351 பாதாளம் முதலிய லோகங்கள் எல்லாவற்றுக்கும் ஆதாரமான (பொன்மலை) மேருபோல உயர்ந்து வளர்ந்துள்ள சந்தனம் அணிந்த பாரமுள்ள கொங்கையை விலைகூறி. (முன்பக்கத் தொடர்ச்சி) செய்த வேலை என்று தெரிந்து ஏக்கங் கொண்டார்கள். இங்ங்ணம் இறந்துபடுதற்கு இருந்த அருச்சுனனைக் கண்ணபிரான் காத்தளித்தனர். t கோனாடு - என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு மதிற்கரைக்குக் கிழக்கு காவிரி நதிக்குக் தெற்கு பிரான்மலைக்கு வடக்கு இந் நான்கு எல்லைக்கு உட்பட்டது. கொங்கு மண்டல சதகம், பக்கம் 27, ஆதாரமான மேரு' - மேரு லோகங்களைக் கோத்துக் கொண்டு காத்தல் . " மகாமேருப் பறியுண்ண உலகு நிலைகுலையும்" - தக்க பரணி - தாழிசை 161 உரை. மேருத்துரண் ஒன்று நடுநட்டு" மீனாட்சி - பிள்ளைத்தமிழ் 16, "மேரு நடுநாடி" - திருமந்திரம் 2747. " தாங்குமால் வரை" - சம்பந்தர் II-51-7. மேரு உயர்ச்சியைக் காட்டும் - பாட்டு 273 - உரை; பாட்டு 286 பார்க்க