உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/863

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை பாலோடு பாகு தேனெ னினியசொ லாலேய நேக மோக மிடுபவர் பாதாதி கேச மாக வகைவகை கவிபாடும்; வேதாள ஞான கீனன் விதரண நாதானி லாத பாவி யநிஜவன் வீணாள்ப டாத போத தவமிலி LJort_//ToёР வியாபார முடன் யானு முனதிரு சீர்பாத துாளி யாகி நரகிடை வீழாம லேசு வாமி திருவருள் புரிவாயே! துாதாள ரோடு காலன் வெருவிட வேதாமு ராரி யோட அடுபடை சோரா "வ லாரி சேனை பொடிபட மறைவேள்விச். #சோமாசி மார்சி வாய நமவென மாமாய வீர கோர முடனிகல் ஆர்மாள வேலை யேவும் வயலியி லிளையோனே, 'வலாரி - வலாசுரனுடைய அரி (பகைவன்) இந்திரன், வலன் ஒரு அசுரன், இவன் இறந்தால் தன்னுடல் நவமணிகள் ஆகும்படியான வரத்தைப் பெற்றனன். இந்திரன் செய்த வஞ்சனையால் அவனுக்கு யாகப்பசுவானான் யாகத்தில் மறைந்த இவன் உடல் விலையுயர்ந்த ரத்னங்களாயின. இவன் உடலில் இருந்த ரத்தம் மாணிக்கங்கள் ஆயிற்று பற்கள் முத்துக்களாயின. மயிர்கள் வைடுரியமாயின; எலும்புகள் வைரமாயின; பித்தம் மரகதம் ஆயிற்று, நிணம் கோமேதகம் ஆயிற்று, தசைகள் பவளமாயின. கண்கள் நீலமாயின; கபம் புஷ்பராக மாயிற்று. (அபிதான சிந்தாமணி - பக்கம் 172) tசோமாசிமார் - சோமயாகம் செய்பவர்கள். வேதாகமங்களில் விதித்தவாறு சிவயாகங்களை நியம நியதியுடன் செய்கின்ற மறையோர் சோமாசி - சோமயாசி எனப் பேர் பெறுவர். சோமயாகம் - தேவர் பொருட்டுச் சோமரசம் அளிக்கும் வேள்வி வகை. சோமம் - யாகங்களில் தேவதைகளுக்கு நிவேதித்துப் பின் யாகம் செய்பவர் பருகுதற்குரிய இரசம் சித்தஞ்செய்யுங் கொடி