உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/864

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - விராலிமலை) திருப்புகழ் உரை 391 பால், சர்க்கரை, தேன் இவைபோன்ற இனிப்புள்ள மொழிகளாலே நிரம்ப காம மோகத்தைத் தருபவர்களாகிய பொதுமகளிருடைய பாதம் முதல் கூந்தல் வரையும் உள்ள உறுப்புக்களை வகைவகையாக வர்ணித்துப் பாடல் பாடும். பேயன், ஞானம் குறைபாடுடையவன் - விவேகமுள்ள நாதான் (நாக்கே) இல்லாத பாவி, நிசம் என்பதே இல்லாதவன் (உண்மையிலாதவன்), வீணாள் உண்டாகாமற் காக்கும் அறிவும் தவமும் இல்லாதவன் - உயிரைப் பற்றியும், உலகப்பற்றுக்களைப் பற்றியுமே வியாபாரம் செய்கின்ற (பேசிப் பொழுது போக்குகின்ற) அதாவது பதிஞானம் (இறைவனைப் பற்றிய அறிவு) இல்லாத முடன் ஆகிய இத்திறப்பட்ட நானும் உன்னுடைய அழகிய (அல்லது உன்னுடைய இரண்டு) சிறப்பு நிறைந்த பாதங்களின் துாளியாகும் பேறுபெற்று அத்தகைய பேற்றினால், நரகினிலே விழாதவாறு சுவாமியே! நீ திருவருள் புரிந்தருளுக! (தன்னுடைய) து.ாதர்களுடன் காலன் அஞ்சவும், பிரமனும், திருமா லும் (அஞ்சி) ஒடவும். கொல்லவல்ல படை சோர்ந்து போய் இந்திரனுடய சேனை பொடிபட்டழியவும், வேத வேள்விகள் சோம யாகம் ஆதிய செய்யும் பெரியோர்கள் " சிவாயநம" என்னும் ஐந்தெழுத்தோதி (பஞ்சாட்சரத்தை) ஒதித் துதித்து நிற்கவும் மகாமாயங்களும் வீரமும் கோரமும் பொருந்தப் போர் செய்த சூரன் இறக்கும்படி வேலாயுதத்தைச் செலுத்தின இளையோனே! வயலூரில் வீற்றிருக்கும் இளையோனே!