உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/865

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை கூதாள நீய நாக மலர்மிசை சாதாரி தேசி நாம க்ரியைமுதல் கோலால நாத கீத மதுகர மடர்சோலை. 'கூராரல் தேரு நாரை மருவிய கானாறு பாயு மேரி வயல் பயில் கோனாடு சூழ்வி ராலி மலையுறை பெருமாளே (2) 352. மனோலயம் பெற தனாதன தனாதன தனாதன தனாதன தனாதன தனாதனன தனதான இலாபமில் பொலாவுரை சொலாமண தபோதன ரியாவரு மிராவுபக லடியேனை. இராகமும் விநோதமு முலோபமு டன்மோகமு மிலானிவ னுமாபுருஷ னெனஏய; சலாபவ மலாகர சசி தர விதாரண சதாசிவ மயேசுரச கலலோக, சராசர வியாபக பராபர tமநோலய சமாதிய நுபூதிபெற நினைவாயே 'நாரை ஆரல் மீன் தேர்தல் - நாரை வெள்ளிய சிறகையும், பசிய காலையும், செவ்வாயையும் உடைய பறவை. இது ஆரல், கெண்டை நெற்கதிர் முதலியவற்றை உண்ணும். "பகுவாய் நாரை ஆரல் வாரும் பாகுரே" - சம்பந்தர் II-60.9. ஆரல் அருந்த வயிற்ற நாரை - குறுந்தொகை 114. t மநோலய சமாதி அநுபூதி வேண்டும் பிற திருப்புகழ்ப் பாடல்கள்:- 235, 506.11.10.