உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/866

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . விராலிமலை திருப்புகழ் உரை 393 கூதளம் (ஒரு பூ), கடப்ப மலர், சுரபுன்னை மலர் இவைகளின்மீது மொய்த்துப் பண் சாதாரி (பந்துவ. ராளிராகம்), தேசி (ஒரு ராகம்), நாமக்கிரியை (நாத நாமக்கிரியை முதலான ஆடம்பரமான நாதகீதங்களை ஒலி இசைகளைப் பாடும்) வண்டுகள் நிறைந்த சோலைகளும் நிரம்ப ஆரல் மீன்களை ஆய்ந்து தேடும் நாரை (நீர்ப் பறவைகள்) பொருந்திய காட்டன்று பாய்கின்ற ஏரிகளும், வயல்களும் நெருங்கியுள்ள கோனாடு என்னும் பிரதேசத்தில் உள்ள விராலிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே! (நரகிடை வீழாமல் திருவருள் புரிவாயே) 352 இலாபம் இல்லாத பொல்லாத மொழிகளைச் சொல்லாத மனத்தை உடைய தவத்தினர்கள் யாவரும் இரவும் பகலும் அடியேனைக் குறித்து (இவன்) . ஆசை, விளையாடல்களில் இன்ப மகிழ்ச்சி, பொருளாசை (சயாமைக்குணம்), காம மயக்கம் இவை இல்லாதவன், இவனும் ஒரு சற்புருடன் என்று சொல்லும் சொல் பொருந்தும்படியாக, சல்லாபம் (சரசம் - இனிய குணத்ததான), அமலாகர அமல ஆகர (பரிசுத்தத்துக்கு இருப்பிடமான), சசீதர (சந்திரனைத் தரித்த), விதரண (கருணை நிறைந்த). (அல்லது விதாரண அழிக்கின்ற தொழில் பூண்டவரே!) சதாசிவ மகேசுர நிலையதாய் - சகல லோகங்களிலும் உள்ள நடப்பன - நிற்பன் (இயங்குவன - நிலைத்திருப்பன) வான எவற்றினும் கலந்ததான - பரம்பொருளாய் உள்ள மனம் ஒடுங்கிய சமாதி அநுபூதி நிலையை அடியேன் பெற நீ நினைந் தருளுமாறு வேண்டுகின்றேன்.