உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/881

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை 356. மாதர் கலவியற தனதனனந் தான தாத்த தனதனனந் தான தாத்த தனதனனந் தான தாத்த தனதான எதிரெதிர்கண் டோடி யாட்கள் களவதறிந் தாசை பூட்டி இடறிவிழும் பாழி காட்டு மடமாதர். "இறைவைகொளுங் கூவல் மூத்த கறையொழுகுந் தாரை பார்க்கி லிளமைகொடுங் காத லாற்றில் நிலையாத, அதிவிகடம் பிற லாற்ற அழுகிவிழும் பிற லூத்தை அடையுமிடஞ் சீலை தீற்று கருவாயில். அருவிசலம் பாயு மோட்டை அடைவுகெடுந் தூரை பாழ்த்த அளறிலழுந் தாம லாட்கொ டருள்வாயே,

  • விதுரனெடுத் த்ரோன மேற்று எதிர்பொருமம் பாதி யேற்றி

விரகினெழுந் தோய நூற்று வருமாள. விரவுஜெயன் காளி காட்டில் வருதருமன் துரத S னீற்ற விஜயனெடும் பாக தீர்த்தன் மருகோனே, 24 அடிகள் அல்குலைக் குறிப்பன. t பிழல் - பீழை - துக்கம், பீளல்-பெண் குறி.

  1. பாண்டவரிடமிருந்து துதராக வந்த கிருட்டிண பகவான் ராச ராசனாகிய தான் ஏற்படுத்தி யிருந்த மாளிகையில் வந்து தங்காது விதுரருடைய வீட்டில் தங்கினாரென்று கோபங் கொண்ட துரியோதனன் விதுரரை நோக்கி, "என் பிதாவோடு பிறந்தும் இன்று வரையில் என் கைச் சோற்றை உண்டும், பொது மடந்தைக்குப் புதல்வனாம் நீ அந்த கிருட்டின. னுக்கு உபசாரம் செய்த வியப்பை நான் என்ன சொல்லி வெறுப்பேன்" என்றான். இவ்வசை மொழியைக் கேட்ட விதுரர் மிக்க கோபங் கொண்டு "வசை சொன்ன உன் வாய் குருதி கக்கும்படி உன் முடியை நான் துணிப்பேன் - ஆயினும் பொறுக்கின்றேன்; பாண்டவர்க்கு நான் உதவி செய்யப்புகின் யார் என்னைத் தடுக்கக் கூடும். இனி நான் போரில் அம்பைத் தொடேன்" என்று கூறித் தன் கையிலிருந்த மிகச் சிறந்த வில்லை. இரண்டுபட வெட்டி யழித்துத் தனது வீட்டுக்குச் சென்றார். 'இனிச் சமரினின்று வெங்கணை தொடேன் எனா உயர்ந்த வில்லதனை வேறிரண்டு பட வெட்டினான்" வில்லிபாரதம் - கிருஷ்ணன் துாது - 131.