உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/882

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . விராலிமலை திருப்புகழ் உரை 409 356 எதிரில் எதிரில் (வருகிறவர்களைக்) கண்டதும் ஒடிச் சென்று, வருகின்ற ஆள்களின் நிலையைத் திருட்டுத்தனமாக வஞ்சனை வழி ல் அறிந்து, அவர்களுக்கு ஆசை ஊட்டி, அவர்கள் தடுக்கி (துன்பப்பட்டு) விழுதற்கு (குகையன்ன) இடத்தைக் காட்டுகின்ற மடமாதர்களுடையா இறைகூடையைக் கொள்கின்ற கிணறு, பழைய அழுக்கு. கள் ஒழுகுகின்ற (துவார) வழி, ஆய்ந்து பார்க்கில் இளம் பருவத்துக் கொடிய காதல் ஆற்றில், நிலைக்க முடியாத மிக்க பரப்புள்ள (அல்லது பயங்கரமான) பீழல் (பிழை) துக்கம் விளைக்கும் இடம், ஆற்ற #'TKಿ கிழியுண்ட இடம், அழுக்கு சேரும் இடம், ஆடை மூடுகின்ற கரு உண்டாகும் துவார வாசல் அருவி போல நீர் பாய்கின்ற ஒட்டை, தகுதியற்ற அடிப்பாகம், (ஆகிய) சீர்குன்றிய சேற்றில் (நான்) அழுந்தாமல் (என்னை) ஆட்கொண்டருள் புரிவாயாக; விதுரன் தனது பெரிய வில்லை எடுத்து, எதிரியுடன் போர் செய்ய அம்பு முதலிய பாணங்களை அதில் ஏற்றிச் சாமர்த்தியத்துடன் எழுந்து போர் புரிதல் ஒயுமாறும் (இல்லாமற் போகவும்), துரியோதனன் ஆகிய நூற்றுவரும் இறந்து போம்படியும், உபாயஞ் செய்த செயவீரன், காளிகாட்டில் (காடுகிழாள்) துர்க்கை வாழும் வனத்தில் வாசஞ்செய்து வந்த தரும புத்திரருடைய தாதன், திருநீறிட்டு தவஞ்செய்த அருச்சுன்னு: டைய பெரிய தேர்ப்பாகன்ாம் (சாரதியாம்) பரிசுத்தமூர்த்தி - ஆகிய திருமாலின் மருகோனே! 'காளிகாடு - இடும்பாவனம். S நீற்ற விசயன் - பாசுபதாத்திரம் பெறும்பொருட்டுத் தேக முழுதும் நீறு பூசிக்கொண்டு தவஞ்செய்த அருச்சுனன்.