உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/894

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - விராலிமலை திருப்புகழ் உரை 421 (இக்கண்களின் கொடுமை முன் நாம் எவ்வளவு என்று தங்கள்) இறுமாப்பை இழக்க, மோகத்தன்மையை ஊட்டி நீலோற்பலத்தின் குற்றமில்லாத மலருடன் ஒப்பான கூத்து விநோதத்தைக் காட்டும் (அல்லது - மலர்போன்று அழகிய கூத்து வேடிக்கையைச் செய்யும்) கண்களை உடைய (பொது) மகளிரிடத்தே . (மகளிர் காரணமாக). -- நீங்காத பழியை (நிந்தை அலர்ப்பேச்சைக்) கொண்டிருந்த மயக்கம் எனைவிட்டு நீங்க நீ (அடியேன்) எதிரில் தோன்றி, முன்பு, ஆட்கொண்ட அடிமையாகிய என்னைக் கரையேற்றின (உய்யச் செய்த) காரணத்தால் உன் (அருள்) வலிமையை நான் மறவேன். சீமாட்டி (பெருமாட்டி) யாகிய திரிபுரை, காலாக்கினி (யுகாந்தகால நெருப்புப்போன்ற) கோபம் கொள்ளும் பயிரவி, சீல (நல்லொழுக்கமுள்ள) உத்தமி, நீலி (நீலநிற முடையவள்) விண் ஆதிய முப்புவனங்களுக்கும் ஈசுரி பூனி கார்த்திகையாய அறுவகை மாதர்களும் குமாரன் என்று மிக்க செல்லப் பாராட்டுடன் (உன்னைப்) போற்ற (வளர்ந்து), வடதிசையில் உள்ள கயிலாயத்தில் வீற்றிருக்கும். தலைவராகிய சிவபிராற்கு உபதேசமாக உபநிடதம் வேதம் இவை தமக்குப் பொருளான மெய்ஞ்ஞான மார்க்கத்தை அருளி விளங்க வைத்த (அறியாமை என்னும் குற்றத்தை நீக்கின) குருமூர்த்தி எனப் பெயர் விளங்க வந்த இளையவனே! நெறி தவறாத முறையிற் சிவபூசையும், ஆண்மையும் மறுத்தல் இல்லாத (இல்லை என்னாத) கொடையும் நாளும் பொருந்தியுள்ள (அத்தகைய பெரியோர்கள் வாழ்கின்ற) கோனாட்டைச் சேர்ந்த விராலிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே! (உன் வலிமையை மறவேனே)