பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/901

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 364. திருவடிமறவாமை தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன தனதான மேக மெனுங்குழல் சாய்த்திரு கோக ணகங்கொடு கோத்தனை மேல்விழு கின்ற பராக்கினி லுடைசோர. மேகலை யுந்தனி போய்த்தனி யேகர ணங்களு மாய்க்கயல் வேல்விழி யுங்குவி யாக்குரல் "மயில்காடை கோகில மென்றெழ போய்க்கணி வாயமு துண்டுரு காக்களி கூரவு டன்பிரி யாக்கல வியின்மூழ்கிக் கூடி முயங்கி விடாய்த்திரு பார tதனங்களின் மேற்றுயில் கூரினு மம்புய தாட்டுனை மறவேனே. மோகர துந்துமி யார்ப்ப விராலி விலங்கலின் வீட்டதில் S மூவுல குந்தொழு தேத்திட வுறைவோனே. மூதிசை முன்பொரு காற்றட $மேருவை யம்பினில் வீழ்த்திய மோகன சங்கரி வாழ்த்திட மதியாமல், ஆக மடிந்திட வேற்கொடு சூரனை வென்றடல் போய்த்தணி யாமையின் வென்றவ னாற்பிற கிடுதேவர். ஆதி 'யிளந்தலை காத்தர சாள அவன்சிறை மீட்டவ னாளு லகங்குடி யேற்றிய பெருமாளே. (15) 'மயில் காடை இவை புட்குரல் - பாட்டு 197 பார்க்க t தன பாரம். மேவி மால் கூருகினும் உன் நீப சீர்பாதம் மறவேனே திருப்புகழ் 1054. விராலி விலங்கல் - விராலி மலை. S மூவுலகு - பூலோகம், பரலோகம், பாதாளலோகம் (அல்லது) பூமி, அந்தரம், சுவர்க்கம், சுவர்க்கம் - மத்தியம் பாதாளம் $ மேருவை வீழ்த்தினது:- மேரு கிரெளஞ்சம் என்றும் கொள்ளலாம். மேருவைச் செண்டாலடித்த திருவிளையாடலையும் கொள்ளலாம். (பாட்டு 3 பார்க்க). மேரு துளெழ. திருப்புகழ் 68 பார்க்க. சண்ட மேருக்கிரி யளைந்து வீழப் பொருத கதிர் வேலா - திருப்புகழ் 869. 1 சங்கரி - சங்கையுடைய அரி. (அடுத்த பக்கம் பார்க்க)